மகனுக்கு கடிதம் - மரப்பாச்சி பொம்மை
அன்புள்ள கவின் பாரதிக்கு, உன் அப்பா எழுதுகிறேன். இன்னும் பிறக்காத அல்லது தத்தெடுக்கபடாத குழந்தைகளின் உடல்நலம் மீது அக்கறை கொண்டுள்ள ஒரு தந்தையின் மொழியில் இந்த கடிதம் மரபாச்சி பொம்மைகள் குறித்து உன்னோடு பேசிக் கொண்டிருக்கும். பல்லாயிரமாண்டு மரபின் நீட்சியை தொலைத்த சமூகத்தின் கதையிது. பக்குவத்தோடு இக்கடிதத்தை படிக்கும் பருவம் உனக்கு வரும் பொழுது இதன் அழுத்தம் அறிவாய். புற்று நோய் தொடங்கி நேற்றுவரை நம் தமிழ்ச்சமூகம் கண்டிராத புது புது நோய்களை பரப்பிக் கொண்டிருக்கும் நெகிழி (பிளாஸ்டிக்) பொம்மைகளை உன் இதழ்கள் சுவைத்து விடலாம். அதன் கொடிய நெடியை நீ முகர்ந்துவிடலாம், எல்லாவற்றுக்கும் மேல் நம்மை தாங்கும் தாய் மண்ணிற்கு இது தகாத விளைவை தருமட கண்ணே! அந்த அச்சம் கூட இந்த கடிதத்தை எழுத காரணமாக இருக்கலாம். குழந்தைகளுக்கு உடம்புக்கு முடியமல் போனால் மரபாச்சி பொம்மையை தண்ணியிலிட்டு உரசி நெற்றியில் தேய்க்கும் வழக்கும் நம் மரபில் உண்டு. அப்பேற்பட்ட மருத்துவ குணம் மற்றும் மனிதம் மீது நேசம் நிறைந்தவை நமது மரபு வழி உற்பத்தி பொருட்கள். மரபாச்சி பொம்மைகளை நீ சுவைக்கலாம், கடிக்கலாம், முகரலாம், க...