நாணல் நண்பர்கள் குழுவின் கணக்கு விபரங்கள்
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நாணல் நண்பர்கள் குழு கடந்த இரண்டு வருடங்களாக செயல்பட்டு வருகிறது. களத்தில் செயல்படும் சுமார் 30 இளைஞர்களை கொண்டு மதுரையில் பாரம்பரியம், வாழ்வியல், சூழல், வேளாண்மை, வரலாறு, பல்லுயிரியம், தண்ணீர், குழந்தை கல்வி, மாற்று பாலினம் தொடர்பான விழிப்புணர்வு, பிரசுரம், கருத்தரங்கு, பொது நிகழ்வுகள், போராட்டங்கள் என செயல்பட்டு வருகிறோம். நாம் நடத்திய பல நிகழ்வுகள், போராட்டங்கள் பத்தில் இருந்து முப்பது ரூபாய்க்குள் முடிக்கப்பட்டு இருக்கிறது. எழுத்து, பேச்சு, வழி நடத்தும் பல தோழமை இயக்கங்கள், பெரியவர்கள், நண்பர்கள், முற்போக்கு சிந்தனை, எல்லாவற்றுக்கும் மேலான உழைப்பு இவைதான் நாம் இயங்குவதற்கு பொருளாதரத்தை விட பெரிதும் காரணமாக இருந்தது. அனுபவ குறைவால் அல்லது சரியான திட்டமிடல் இல்லாமல் பல நிகழ்வுகளை எதிர்நோக்கிய பாதைக்கு நகர்த்த முடியாமல் போயிருக்கிறது. பல நிகழ்வுகள், போராட்டங்கள் முற்போக்கான சமூக மாற்றத்திற்கு வித்திட்டிருக்கிறது என்று நம்புகிறோம். வாழ்க்கை முழுதும் வகுப்பறை நிரம்பி இருக்கிறது. வீழ்ச்சியிலும் எழுச்சியிலும் கற்று கொண்டே இருக்கிறோம். கடந்த இரண்டு வருடங்களில் நாணல் நண்பர்கள் குழுவின் செலவு வரவு கணக்குகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். முற்போக்கான சமூக மாற்றம் நோக்கி எங்களை உந்தி தள்ளிய மக்களுக்கு, தோழமை இயக்கங்களுக்கு, சான்றோர்களுக்கு, தோழர்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டிய கடமை நாணலுக்கு இருக்கிறது. இந்த பதிவோடு நாணல் நண்பர்கள் குழுவின் கணக்கு விபரங்களை இணைத்துள்ளோம். உங்கள் கருத்துகளை விமர்சனங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.
நட்புடன்
நாணல் நண்பர்கள்,
மதுரை 20.
8608266088
https://www.facebook.com/NanalNanbargal
Click here to view the Naanal Account details
Naanal Nanbargal Account Detail April 2013 - August 2014

Comments
Post a Comment