தடுப்பூசி - கொஞ்சம் யோசி
என்
நண்பன் ஒருவனுக்கு பிறந்த குழந்தையை காண மருத்துவமனை சென்றிருந்தேன்.
குழந்தை இந்த பூவுலகிற்கு வந்து இரண்டு நாள்தான் ஆகியிருக்கிறது. தொடர்ந்து
குழந்தை இரண்டு நாட்கள் அழுது கொண்டே இருப்பதாக நண்பன் சொன்னான். ஏன்
என்று விவரம் கேட்டதற்கு "ஒரே நாளில் குழந்தைக்கு மூன்று ஊசி போட்டார்கள்"
என்றான். ஏதோ மெலிசான மூன்று முத்தம் கொடுத்தது போல...
நான் "நம்ம அம்மா, பாட்டி எல்லாம் ஊசிகள் போடலயே, நாம் ஏன் போடுறோம்னு"
கேட்டேன். "அந்த காலத்து சாப்பாடு வேற இந்த காலத்து சாப்பாடு வேற"
என்றார். அப்படியானால் நாம் மாற்ற வேண்டியது நம் உணவைத்தான். அதற்கு ஊசி
தீர்வு ஆகாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம்மை இந்த உலகத்திற்கு
கொண்டு வந்ததும், வாழ வைப்பதும் இயற்கைதான். தடுப்பூசிகள் அல்ல. பல
தலைமுறைகளாக எடுத்து வந்த நம் பாரம்பரிய மருத்துவத்தை பிற்போக்கானது என்று
ஒதுக்கியதால், நம் மண்ணிற்கு சம்மந்தம் இல்லாத வேதி நச்சுகள் நிறைந்த
மருத்துவத்தை கட்டி அழும் நிலைக்கு கொண்டு வந்திவிட்டது. ஐந்து வருடம்
படித்து வரும் ஆங்கில மருத்துவரை நம்பும் நாம், ஐந்து தலைமுறைகளின் அனுபவ
முதிர்வில் மருத்துவ அறிவு பொதிந்து கிடக்கும் நம் பாட்டியை நம்பாமல்
ஒதுக்கி புறம் தள்ளியதன் விளைவே இது.
1980களில் தடுப்பூசிகளின்
எண்ணிக்கை வெறும் 8, இன்று 60. அம்மை தடுப்பூசி, மஞ்சகாமாலை தடுப்பூசி
ஆகிய தடுப்பூசிகள் நமக்கும் போடப்பட்டு இருக்கிறது. ஆனால் அம்மை நோயும்,
மஞ்சகாமளையும் நமக்கு வருவதை இந்த தடுப்பூசிகள் முற்றிலும்
தடுத்துவிட்டனவா? படித்த விஞ்ஞானிகளை கொண்ட நம் இந்திய மருத்துவத்துறை,
வளர்ந்த நாடுகளால் தடை செய்யப்பட்ட பல தடுப்பூசிகளை ஈவிரக்கமில்லாமல் நம்
பிஞ்சு குழந்தைகள் மீது ஏற்றுகிறது. இந்த உண்மையை நமக்கு அரசு என்றைகாவது
சொல்லி இருக்கிறதா? இந்திய பெற்றோர்களை பொருத்தவரை பிறந்திருப்பது பச்சிளம்
குழந்தை. இந்திய மருத்துவத்துறைக்கு அது பரிசோதனைக் கூட எலி.
சிந்தியுங்கள்...
கா. கார்த்திக்
நாணல் நண்பர்கள் குழு
மதுரை
நாணல் நண்பர்கள் குழு
மதுரை
9976444674
Comments
Post a Comment