மரபும் மரமும்

தமிழக மன்னர்களில் பாண்டிய மன்னனே பழமையான மன்னன் என்பது எல்லோரும் அறிந்ததே. முதல் மற்றும் இடை சங்கங்கள் மட்டுமே 237 பாண்டிய மன்னர்களால் 8100 ஆண்டுகள் இயங்கின என்பது வரலாற்று செய்தி. அந்த வகையில் மன்னர்களின் சின்னங்கள் குறித்து நாம் அறிந்தது வெகு சிலவே.சங்ககால மன்னர்கள் தாவரங்களை தங்கள் வாழ்வியலோடு இணைத்து பார்த்தனர். 


அதற்கு சான்றுகள் சில இங்கே... வேப்பமரமும் அதன் பூக்களும் பாண்டிய மன்னர்களின் சின்னம். ஆர் என்கிற அத்திப்பூ சோழ மன்னர்களின் சின்னம். போந்தை என்கிற பனைமரம் சேர மன்னர்களின் சின்னம். அரசமரம் தொண்டை மண்டில மன்னர்களின் சின்னங்களாக திகழ்ந்தன. இம்மண்ணின் மரங்கள் ஒவ்வொன்றும் நம் மரபோடும்,வாழ்வியலோடும் பிணைந்தவை. ஆனால் இந்த நகர மயமாக்கல் இந்த பிணைப்பை துண்டித்து விட்டது. பாண்டிய மன்னனின் சின்னத்தின் ஒன்றான வேப்பமரத்தின் காப்புரிமையை, பெறும் போராட்டத்திற்கு பின் சில மாதங்களுக்கு முன்பு தான் மீட்டெடுக்கப்பட்டது (வந்தன சிவா, நம்மாழ்வார் ஐயா ஆகியோர்களால்) 
தி ஹிந்து நாளிதழ், மதுரை 18 ஜூன் 2014
நமது பாரம்பரியத்திற்க்கு காப்புரிமை கொண்டாட அவர்கள் யார்? இன்னும் நமது பாரம்பரிய தாவரங்கள் காப்புரிமை எனும் அடிமைகளாக முதலாளித்துவ நாடுகளின் கட்டுக்குள் உள்ளது. நமது நாட்டில் மரங்களின் நிலையோ வல்லாதிக்க நாடுகளைவிட, இன்னும் மோசமான நிலையில் உள்ளது. சாப்பிடும் ஆட்டைக் கூட சம்மதம் கேட்டுத்தான் வெட்டுகிறோம் என்று பேசுகிறவர்கள், சுவாசிக்கும் காற்றை தருகிற மதிப்புயர்ந்த மரங்களை கேவலம் பணம், நகர வளர்ச்சி என்ற பெயரில் வெட்டி சாய்க்கிறார்கள். மரம் நமக்கு வழங்கிய வாழ்வை மறந்துவிட்டு மலிவான எதோ ஒன்றை தேடிக் கொண்டிருக்கிறோம்.

அன்புடன்...
கா.கார்த்திக்
நாணல் நண்பர்கள் குழு.

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நம்மாழ்வார் போன்ற நல்ல மனிதர்கள் அவ்வப்போது. பிறப்பதால் நமது மரபும் மரமும் காக்கப்பட்டு வருகிறது

    ReplyDelete
  3. சேர மன்னர்களுக்கும் சோழமன்னர்களுக்கும் போர் நடந்த இடம் போந்தை என்ற இடம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்

மாட்டு இறைச்சியும் எங்கள் பண்பாடே!

வெள்ளிமலை கோயில்காட்டை மீட்போம்