நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்

 இன்றைய இளைஞர்களுக்கு இந்தப் பதிவு வேடிக்கையான அதே சமயம் அர்த்தமற்றதாகக் கூட இருக்கலாம், ஏனென்றால் காலத்தின் வேகம் உயிருடன் இருக்கும் பெற்றோர்களை வணங்கவே அனுமதிப்பதில்லை இதில் எங்கு வாழ்ந்து இறந்த நாட்டார் தெய்வங்களை வணங்க அனுமதி தரப் போகிறது. ஆனால் நம்முள் எங்கோ ஒழிந்து கொண்டிருக்கும் ஓர் உணர்வு.

கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்களின் நம்பிக்கையோடும்,கடவுள் இல்லை என்று சொல்பவர்களின் நம்பிக்கையோடும் விளையாடுவது எங்களின் நோக்கமும்,இந்தப் பதிவின் நோக்கமும் அல்ல.

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்.

இந்த நிகழ்வு எவரொருவர் மனதையும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தோம்,இது மனதின் நம்பிக்கை சார்நத விசயமென்பதால்...

சமயங்கள் தோன்றுவதற்கு முன் பார்ப்பன,பணக்கார சுவாமிகளை வழிபடும் வழக்கம் நம் மரபில் இல்லை. ஆனால் சங்க இலக்கிய காலத்தில் இருந்தே நாட்டார் தெய்வங்களை வழிபடும் முறை நம்மிடம் இருப்பதை சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. நம் முன்னோர் நடுகல் வழிபாடு

கல்லை வணங்குவது விபரம் தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் வேடிக்கையான ஒன்றாக இருக்கலாம். ஆனால் விபரம் தெரிந்தவர்களுக்கு அப்படி இருக்காது. ஆம் நாம் நம்பிக்கையோடு வலம் வந்து வணங்கும் ஒவ்வொரு நடுகல்லும் ஓர் உயிரின் அடையாளம்.
அப்படி நடப்பட்ட நடுகல் அடையாளம் ஏதுமின்றி நடப்பட்டிருக்கலாம்,அல்லது பெயர் பொறிக்கப்பட்டிருக்கலாம்,ஒரு சில கல்லில் உருவங்களும் இருக்கலாம். இவையாவும் அந்தந்த மக்கள் சூழ்நிலைக்கேற்ப நடப்பட்டவை.

நாட்டார் தெய்வங்கள் இவர்களுக்கு
இந்த உணவைத்தான் படைக்க வேண்டும் என்றும் பூசை செய்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் எந்த கட்டுப்பாடும் கிடையாது.

நாம் என்ன உண்கிறோமோ இன்னும் சொல்லப்போனால் சூழலுக்கு ஏற்ப நம் உணவு மாறுபடுவது போல இவர்களுக்கு படைக்கும் படையலும் மாறுபடும்,ஏனென்றால் நாட்டார் தெய்வங்கள் நம்மைப் போல் வாழ்ந்து பிறருக்காக போராடியோ அல்லது பிறரால் துன்புறுத்தப்பட்டோ இறந்தவர்கள்... 

பிறரின் நம்பிக்கைக்கு மதிப்பளிப்பது நம் மரபு என்பதை நாங்கள் மறக்கவும் இல்லை மறுக்கவும் இல்லை.

மு.பிரசன்னா தமிழ்
நாணல் நண்பர்கள்
மதுரை
9791742779

Comments

Popular posts from this blog

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்

மாட்டு இறைச்சியும் எங்கள் பண்பாடே!

வெள்ளிமலை கோயில்காட்டை மீட்போம்