நியூட்ரினோ திட்டமும் தீர்ப்பும்



தானியங்கு மாற்று உரை இல்லை. நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ள சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்தும், அதுவரை நியூட்ரினோ ஆய்வு பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனவும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இது நியூட்ரினோ திட்டத்திற்கே தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று பலராலும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. உண்மை என்னெவெனில் சலிம் அலி என்றோர் நிறுவனம் அம்பரப்பர் மலையில் ஆய்வு மேற்கொண்டு ஒரு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தயார் செய்தது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் அம்பரப்பர் மலையில் வாழும் பல்லுயிரிகளுக்கு பெரியளவில் எந்த பாதிப்புகளும் இருக்காது என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டது. இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் வனத்துறையும் 2011 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு பசுமை தீர்ப்பாயத்திலும் தகவல் அறியும் உரிமை சட்டத்திலும் இயங்கியதன் விளைவாக "சலிம் அலி நிறுவனம் சுற்றுச்சூழல் பற்றி ஆய்வு செய்யவில்லை, அது குறிப்பாக பல்லுயிரிய பெருக்கம் குறித்து மட்டுமே ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து இருக்கிறது என்றும், மேலும் சலிம் அலி நிறுவனம் சுற்றுச்சூழல் அறிக்கை தயாரிப்பதற்கு அங்கீகாரம் பெறாத நிறுவனம் என்றும் பல்வேறு உண்மைகள் வெளியே வந்தன". இந்நிலையில்தான் பசுமை தீர்ப்பாயம் 'தகுதியாற்ற சுற்றுச்சூழல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதி செல்லாது என்று சொல்லி அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. சலிம் அலி நிறுவனம் அங்கீகாரம் பெறாத நிறுவனம் என்று பல உளவுபிரிவுகளை கொண்ட மத்திய அரசுக்கு தெரியாதா? எல்லாம் கூட்டு களவாணித்தனம். முறையான சுற்றுச்சூழல் அறிக்கை தாக்கல் செய்தால் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படும். இதனை நீதிமன்றம் தடுக்க முடியாது. இது அரசின் கொள்கை முடிவு என்று சொல்லி ஒதுங்கிக்கொள்ளும். இவ்வாறுதான் மலைகளை உடைக்கும் கிரானைட் குவாரிகளுக்கு, கடலோர வாழ்வை சீரழிக்கும் தாதுமணல் குவாரிகளுக்கும், ஸ்டர்லைட் ஆலைக்கும், தாமிரபரணியில் தண்ணீர் எடுக்கும் பெப்சி குளிர்பான நிறுவனத்திற்கும் முதலில் தடை விதிக்கப்பட்டு பின் அனுமதி கொடுக்கப்பட்டது. நீதிமன்றங்கள் கவலையெல்லாம் நிலம், காற்று, ஆறு, கடல், மலை என எதுவாகினும் அதை முறையாக சட்டப்படி பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்திடுங்கள் என்பதுதான். பேரழிப்பு திட்டங்களுக்கு எதிரான மக்களின் தொடர்ச்சியான போராட்டமே மக்கள் விரோத திட்டங்களை விரட்டியடிக்கும். தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் நியூட்ரினோ திட்டம் நடைபெறுகிறது என்று வைகோ அவர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்தான் தமிழக அரசு 7 பேர் கொண்ட குழுவை ஆய்வு செய்வதற்கு நியமித்து இருக்கிறது. இந்த ஆய்வு குழுக்கள் என்ன மாதிரியான அறிக்கைகளை தாக்கல் செய்யும் என்பதை மீத்தேன் உள்ளிட்ட போராட்டங்களிலே நாம் பார்த்துவிட்டோம். 50 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனி அம்பரப்பர் மலையை 500 டன் வெடிமருந்துகளை கொண்டு வெடிக்க வைத்து சுரங்கம் அமைப்பதற்காக குடையப் போகிறார்கள். மலையை குடைந்து 130 மீட்டர் நீளமும் 26 மீட்டர் அகலமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட சுரங்கம் அமைக்கிறார்கள். அதன் கட்டுமான பணிகள் மட்டுமே 3 வருடங்கள் நடக்கும். இந்த சுரங்கம் அமைக்க வெடிவைத்து தகர்கற்க்கப்படும் பாறைகளை எங்கே கொட்டுவீர்கள்? வெடிவைப்பதால் உருவாகும் காற்று மாசை, ஒலி மாசை எப்படி தடுப்பது ? இதையெல்லாம் அளவிட அரசிடம் கருவிகள் உள்ளதா? அம்பரப்பர் மலையின் அருகிலுள்ள முல்லை பெரியாறு, இடுக்கி மற்றும் வைகை அணைக்கட்டுகளுக்கு எந்த சேதாரமும் ஏற்படாதா? நியூட்ரினோ திட்டம் செயல்பட துவங்கினால் தினமும் 3,40 இலட்சம் லிட்டர் தண்ணீர் பெரியாற்றில் இருந்து எடுக்கப்படுமே! இதனாலெல்லாம் எந்த சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்படாதா? என்பன போன்ற கேள்விகளுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. இந்த கேள்விகளை  கேட்பவர்கள் எல்லாம் அறிவியல், வளர்ச்சிக்கு, வல்லரசு கனவுக்கு எதிரான தேசதுரோகிகள் என்று ஆளும் அரசால் முத்திரை குத்தப்படுகிறார்கள். அமெரிக்க சர்வதேச வடிவமைப்பு ஆய்விற்க்கான அறிக்கையின்படி நியூட்ரினோ தொழிற்ச்சாலைகளில் இருந்து தயாரிக்கப்படும் நியூட்ரினோவை 7500 கி.மீ பூமிக்கு அடியில் பயணிக்க செய்யும் அமெரிக்காவின் துணை திட்டம்தான் இந்திய நியூட்ரினோ ஆய்வு திட்டம். இன்னும் ஒருபடி மேலாக ஜப்பானிய விஞ்ஞானிகள் சுகவரா (Hirota Suguwara) உள்ளிட்டோர் நியூட்ரினோக்களை கொண்டு தற்போதிருக்கிற அணுஆயதங்களை விடவும் அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கலாம் என்கிறார்கள்.
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர்
நாணல் நண்பர்கள் இயக்கம் சார்பாக வி.வி.மு தோழர்களுடன் இணைந்து நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்க வேலைகளை தொடர்ச்சியாக மேற்கொண்ட போது அம்பரப்பர் மலையை சுற்றியுள்ள கிராம மக்களை சந்தித்து இருக்கிறோம். அவர்கள் தங்கள் மலையை அழிக்கும் எல்லா திட்டங்களுக்கும் எதிராகவே இருக்கிறார்கள். தகுதியற்ற சுற்றுச்சூழல் மதிப்பீடு அறிக்கையை தயாரித்து, தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியை பெறாமல் இத்தனை அவசரமாக அம்பரப்பர் மலையை அழித்து அமெரிக்காவுக்கு சேவகம் செய்ய துடிக்கும் இந்திய தேச பக்தர்களிடமிருந்து தமிழகத்தை காக்க நம்மிடம் இருக்கும் ஒரே தீா்வு போராட்டம் போராட்டம் மட்டுமே நாணல் நண்பர்கள் இயக்கம் 20.03.2017

Comments

Popular posts from this blog

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்

மாட்டு இறைச்சியும் எங்கள் பண்பாடே!

வெள்ளிமலை கோயில்காட்டை மீட்போம்