கக்கூஸ் ஆவணப்படம் திரையிடல்

மதுரையில் நண்பர் வீட்டில் நேற்று (26.3.2017) கக்கூஸ் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வு அமைப்பு தோழர்கள், பெண்கள், நண்பர்கள் உள்ளிட்டோரின் பங்கேற்போடு நடைபெற்றது. திரையிடல் நிகழ்வினை தோழர் கவி தமிழ், பூபதிராஜ் ஒருங்கிணைத்தனர். திரையிடல் துவங்கும் முன்பு துப்புரவு பணி செய்யும் மக்கள், இடஒதுக்கீடு குறித்தான கலந்துரையாடலை செய்தோம். இளம் நண்பர்கள் சிலரிடம் அவர்களை அறியாமல் பொது சாதிய மனநிலையில் இருந்து கேள்விகளும், கருத்துகளும் வெளிப்பட்டன. பின் கக்கூஸ் ஆவணப்படம் திரையிட்டோம். அத்தனை கேள்விகளுக்குமான அரசியல் பதிலாக படம் ஓடிக் கொண்டே இருந்தது. கூட்டு மனசாட்சியின் மவுனத்தை கலைக்கும் ஆயுதமாக படம் அமைந்திருக்கிறது. படம் முடிந்த பிறகு கக்கூஸ் படத்தின் கணேஷ்குமார், ஒளிப்பதிவாளர் தோழர் கோபாலின் உரை இவ்விஷயத்தில் முற்போக்கு இயக்கங்களின், தனிநபர்களின் நகர்வு எவ்வாறானதாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியது. மேலும் படம் குறித்து நிறைய பேச இருந்தாலும், படத்தின் நோக்கம் இப்படியான மலக்குழி அவலங்கள் நடைபெறுகிற போது, அதற்க்கான போராட்ட குரல் அதிகரிக்க வேண்டும் என்பதே! சகமனிதரை மலக்குழியில் தள்ளும் சமூக அவலத்திற்கு எதிரான அரசியல் நகர்வுகளில் பங்கேற்போம், ஒருங்கிணைப்போம். கக்கூஸ் படத்தை ஆதிக்க சாதி சங்கங்களிடமும், ஆதிக்க இந்து சாதிய மனநிலை கொண்டோரிடமும் கொண்டு செல்ல வேண்டும். உளவியல் ரீதியாக அவர்களிடம் கக்கூஸ் என்ன செய்கிறது என்பதை படிக்கச் வேண்டுமென விரும்புகிறேன். தோழர் திவ்யா, தோழர் கோபால், தோழர் பழனிக்குமார் உள்ளிட்ட கக்கூஸ் படக்குழுவினருக்கு எங்களது நன்றியும், அன்பும்



#kakoos
தடையை மீறி வீதிக்கு வர வீடுகளில் திரையிடுவோம்.
Comments
Post a Comment