மாட்டு இறைச்சியும் எங்கள் பண்பாடே!
சென்னை ஐ.ஐ.டி ஆய்வு மாணவர் சூரஜை கொடூரமாக தாக்கிய கோமாதா பக்தர்களான பாசிச இந்துத்துவ மாணவர் அமைப்பையும், அதன் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழர்கள் மாட்டிறைச்சி உண்டது பற்றி சங்க இலக்கியம் பதிவு செய்கிறது. அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் மாட்டு இறைச்சி பற்றிய குறிப்புகள் உள்ளன.

"கலங்குமுனை சீறூர் கைத்தலை வைப்பக்
கொழுப்பு ஆ தின்ற கூர்ம்படை மழவர்" - (அகம் 129)
சிறிய ஊரினர் கையை தலை மீது வைத்து வருந்தும்படி, அவருடைய கொழுத்த ஆவினை (பசு) கவர்ந்து சென்று தின்ற கூரிய படையையுடைய மழவர் என்று அகநானூறு கூறுகிறது.
அகநானூற்றின் 309ஆம் பாடல் பசுவை தமிழ் கடவுளுக்கு பலிகொடுத்து, பின்னர் அதன் இறைச்சியை மறவர்கள் உணவாக உட்கொண்டார்கள் என குறிப்பிடுகிறது.
"வயவாய் எறிந்து வில்லின் நீக்கி
பயநிரை தழீஇய கடுங்கண் மறவர்
அம்புசோன் படுத்து வன்புலத்து உய்த்தென
தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்
கொழுப்பா ஏறிந்து குருதி தூ உய்ப்
புலவுப் புழுக்குண்ட வான்காண் அகலறை" (அகம் 309)

பாணர்கள் மாட்டிறைச்சி உண்டது பற்றி நற்றிணை குறிப்பிடுகிறது.
ஜல்லிக்கட்டு எங்கள் பண்பாடு என்றால்
மாட்டு இறைச்சியும் எங்கள் பண்பாடே!
-நாணல் நண்பர்கள் இயக்கம்
Comments
Post a Comment