சமயநல்லூர் மின்வாரிய வளாக மரங்களை வெட்டும் பணியை தடுக்க வலியுறுத்தி



சமயநல்லூர் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காடு போல விளங்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட பழமையான மரங்களை வெட்டுவதற்கான குத்தகை விடப்பட்டுள்ளது. வெட்டப்படும் மரங்கள் அனைத்தும் மையிட்டு குறிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவ்வளாகத்தில் இருந்த பணியாளர் குடியிருப்பு முழுதும் இடித்து தரைமட்டாக்கப்பட்டு, பணியாளர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருக்கிறது. இன்னும் சில தினங்களில் மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு துணை மின்நிலையம் அமைக்கும் பணி தீவிரப்படத்தப்படவிருக்கிறது. மதுரையில் வெப்பநிலையும், வறட்சியும் அதிகரித்து, குடிநீர்  தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வரும் சூழலில்  மரங்களை வெட்டும் அரசின் நடவடிக்கை சரியானதல்ல. வனக்கொள்கை 1988 ன்படி இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் 33 சதவீதம் வனம் இருக்க வேண்டும். அவ்வகையில் தமிழ்நாட்டின் வனப்பரப்பு 18 சதவீதகமாகவும், மதுரையின் வனப்பரப்பு 11 சதவீதமாகவும் இருப்பதாக 2013 ஆம் ஆண்டு வனக்கணக்கெடுப்பு சொல்லுகிறது. அதுமட்டுமல்ல அரசியலமைப்பு சட்டம் 48(A) சுற்றுச்சூழலை பாதுகாப்பது அரசின், அரசு நிர்வாகங்களின் கடமை என வலியுறுத்துகிறது. எனவே சமயநல்லூர் மின்வாரிய வளாகத்தில் மரங்களை வெட்டுவது இந்திய வனக்கொள்கை மற்றும் இந்திய அரசியலமைப்பு வரையறுக்கும் அரசின் கடமைகளுக்கு எதிரானது.

Image may contain: 2 people, people standing and outdoor

Image may contain: 4 people, people standing and outdoor

அதைவிடுங்கள். புதிதாக அமைக்கப்போகும் துணைமின் நிலையம் உற்பத்தி செய்யாப்போகும் மின்சாரம் யாருக்காக? பரவை, சமயநல்லூர் பகுதிகளில் பெரும்பாலும் குடிசை மற்றும் ஒட்டு வீடுகள் நிறைந்து காணப்படுகிறது. ஒரு வீட்டின் அதிகபட்ச மின்சார தேவை 200 யூனிட்டுக்கு கூடுதலாக இருக்காது. சுற்றுப்புறத்திலுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் மின்சாரத்தை விட பல மடங்கு மின்சாரத்தை வழங்கும் ஆற்றல் தற்போது இயங்குகிற கோட்ட மின்நிலையத்திற்கு உள்ளது. அப்படியென்றால் புதிதாக அமைய போகும் துணை மின் நிலையம் உற்பத்தி செய்யும் மின்சாரம் யாருக்காக? யாருக்காக மரங்களை எல்லாம் வெட்டுகிறார்கள்? அதிசயம் தீம் பார்க், பெப்சி குளிர்பான கம்பனி (இப்போது இயங்கவில்லை), டி .வி.எஸ். ரப்பர் தொழிற்சாலை, ஆரோக்ய பால் உற்பத்தி தொழிற்சாலை, கிரானைட் பாலிஷ் கூடம், பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்களின் தேவைக்காகதான் வளாக பணியாளர்களை வெளியேற்றி, மரங்களை வெட்டி, துணை மின் நிலையம் அமைக்க போகிறார்கள். மாற்று ஏற்பாடாக இந்த துணை மின் நிலையத்தை அருகிலுள்ள அரசின் புறம்போக்கு நிலத்தில் அமைக்க முடியும். அதை ஏன் அரசு நிர்வாகம் செய்ய மறுக்கிறது? மேற்சொன்ன கருத்துகளோடு நேற்று (26.3.2017) பு.இ.மு, ஐந்திணை, திருவள்ளுவர் பேரவை, நம்மாழ்வார் பேரவை, சுழியம், ஓயாத அலைகள், நாணல் உள்ளிட்ட இயக்கங்கள் ஓன்றினைத்து சமயநல்லூர், பரவை பகுதி மக்களை சந்தித்து துண்டறிக்கை பிரச்சாரம் செய்தோம்.

அதன் தொடர்ச்சியாக இன்று (27.3.17) காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மரங்களைவெட்ட கூடாது என்று சொல்லி மனு கொடுத்தோம். அதற்கு பதிலளிக்கும் விதமாக எங்களிடம் பேசிய மின்வாரிய அலுவலர் மின்வாரிய வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட, யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை என்றார். நடந்த விபரங்களை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி  ஊடகங்களிலும் செய்திகளை பகிர்ந்துளோம். இந்நிலையில் மரங்களை வெட்டும் முயற்சியை அரசு கைவிடும் வரை, மக்கள் இயக்கங்களையும், மக்களையும் திரட்டி, தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

(குறிப்பு: தற்போதைய மதுரை சமயநல்லூர் மின்வாரிய வளாகத்தின் கூகுள் வரைபடமும், மதுரை நகரின் கூகுள் வரைபடம் ஒப்பிட்டுக்காக இணைத்துள்ளோம். இரண்டின் பசுமையை பரிசோதித்து கொள்ளுங்கள்)

நாணல் நண்பர்கள் இயக்கம்
8608266088

Comments

  1. The King Casino Archives - Hertzaman
    The goyangfc King Casino Archives, including news, articles, videos, herzamanindir.com/ address, gaming info, The septcasino.com King Casino & Hotel febcasino in Henderson, gri-go.com NV is one of the newest hotels and motels on

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்

மாட்டு இறைச்சியும் எங்கள் பண்பாடே!

வெள்ளிமலை கோயில்காட்டை மீட்போம்