Posts

Showing posts from March, 2017

சமயநல்லூர் மின்வாரிய வளாக மரங்களை வெட்டும் பணியை தடுக்க வலியுறுத்தி

Image
சமயநல்லூர் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காடு போல விளங்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட பழமையான மரங்களை வெட்டுவதற்கான குத்தகை விடப்பட்டுள்ளது. வெட்டப்படும் மரங்கள் அனைத்தும் மையிட்டு குறிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவ்வளாகத்தில் இருந்த பணியாளர் குடியிருப்பு முழுதும் இடித்து தரைமட்டாக்கப்பட்டு, பணியாளர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருக்கிறது. இன்னும் சில தினங்களில் மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு துணை மின்நிலையம் அமைக்கும் பணி தீவிரப்படத்தப்படவிருக்கிறது. மதுரையில் வெப்பநிலையும், வறட்சியும் அதிகரித்து, குடிநீர்  தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வரும் சூழலில்  மரங்களை வெட்டும் அரசின் நடவடிக்கை சரியானதல்ல. வனக்கொள்கை 1988 ன்படி இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் 33 சதவீதம் வனம் இருக்க வேண்டும். அவ்வகையில் தமிழ்நாட்டின் வனப்பரப்பு 18 சதவீதகமாகவும், மதுரையின் வனப்பரப்பு 11 சதவீதமாகவும் இருப்பதாக 2013 ஆம் ஆண்டு வனக்கணக்கெடுப்பு சொல்லுகிறது. அதுமட்டுமல்ல அரசியலமைப்பு சட்டம் 48(A) சுற்றுச்சூழலை பாதுகாப்பது அரசின், அரசு நிர்வாகங்களின் கடமை என வலிய...

கக்கூஸ் ஆவணப்படம் திரையிடல்

Image
மதுரையில் நண்பர் வீட்டில் நேற்று (26.3.2017) கக்கூஸ் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வு அமைப்பு தோழர்கள், பெண்கள், நண்பர்கள் உள்ளிட்டோரின் பங்கேற்போடு நடைபெற்றது. திரையிடல் நிகழ்வினை தோழர் கவி தமிழ், பூபதிராஜ் ஒருங்கிணைத்தனர். திரையிடல் துவங்கும் முன்பு துப்புரவு பணி செய்யும் மக்கள், இடஒதுக்கீடு குறித்தான கலந்துரையாடலை செய்தோம். இளம் நண்பர்கள் சிலரிடம் அவர்களை அறியாமல் பொது சாதிய மனநிலையில் இருந்து கேள்விகளும், கருத்துகளும் வெளிப்பட்டன. பின் கக்கூஸ் ஆவணப்படம் திரையிட்டோம். அத்தனை கேள்விகளுக்குமான அரசியல் பதிலாக படம் ஓடிக் கொண்டே இருந்தது. கூட்டு மனசாட்சியின் மவுனத்தை கலைக்கும் ஆயுதமாக படம் அமைந்திருக்கிறது. படம் முடிந்த பிறகு கக்கூஸ் படத்தின் கணேஷ்குமார், ஒளிப்பதிவாளர் தோழர் கோபாலின் உரை இவ்விஷயத்தில் முற்போக்கு இயக்கங்களின், தனிநபர்களின் நகர்வு எவ்வாறானதாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியது. மேலும் படம் குறித்து நிறைய பேச இருந்தாலும், படத்தின் நோக்கம் இப்படியான மலக்குழி அவலங்கள் நடைபெறுகிற போது, அதற்க்கான போராட்ட குரல் அதிகரிக்க வேண்டும் என்பதே! சகமனிதரை மலக்குழியில் தள்ளும் சமூக அவலத்தி...

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நாணல் நண்பர்கள் இயக்கம்

Image
⁠⁠⁠ வடகாடு மற்றும் நல்லாண்டார் கொல்லை ஊர் மக்கள் போராட்டத்தில் பங்கேற்றோம். வடகாடு மற்றும் நல்லாண்டார் கொல்லை ஊர்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு 23.03.17 அன்று நேரில் சந்தித்து, அவர்களின் தொடர் போராட்டத்தில் நாணல் நண்பர்கள் இயக்கம் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. மதுரை வெள்ளிமலை கோவில்காடு தொடர்பாக நாணலின் சிறுநூல் வெளியீட்டை வடகாடு, நல்லாண்டார் கொல்லை மக்களிடம் கொடுத்து, அது தொடர்பாக மக்களிடம் கவன ஈர்ப்பு பரப்புரை செய்தோம். தாளாண்மை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாமயன் மற்றும் முல்லைவனம் அமைப்பின் தோழர் தவம் அவர்களும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றனர். பாமயன் அவர்கள் கண்டன உரையாற்றி, மக்களின் பல்வேறு கேள்விகளுக்கும், வாழ்வாதாரரா அச்சங்களும் பதிலளித்தார். அறவழியில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக 19வது நாளாக வடகாடு உழைக்கும் மக்களும், 37வது நாளாக நல்லாண்டார் கொல்லை உழைக்கும் மக்களும் போராடி வருகின்றனர். ஊடக வெளிச்சம் பெரியளவில் கிடைக்காமல், அரசு தரப்பின் எந்த பேச்சுவார்த்தைக்கு சமரசமாகாமல், 'ஹைட்ரோகார்பன் தி...

வாழ்வாதார சூழல் மீட்பு பிரச்சார பயணம் - இடையபட்டி வெள்ளிமலை காடு

Image
"காத்து, நெழல், மூலிகை, அடைக்கலம், கால்நட மேய்ச்சல் நெலம் ன்னு எங்களுக்கு எல்லாவுமா இருந்து, தெய்வமா எங்கள காத்து நிக்குற வெள்ளிமலை காட்ட அழிச்சுப்புட்டு, பாதுகாப்பு படை முகாம் கட்டி உங்கள பாதுகாக்கிறோம் ன்னு சொல்றாங்க?" மேய்ச்சல் பூமியை அழிச்சு தரிசாக்கிட்டு இப்ப எங்களுக்கு இலவசமா ஆடுமாடு கவர்மெண்ட் தருது. அதுகளுக்கு தினமும் ஹோட்டல்ல போயி இட்லி வாங்கி ஊட்ட முடியுமா? ஆடு மேய்க்கும் ஒரு அய்யாவின் குரல் இது. "மேய்ச்சல்தான் எங்க தொழிலு, சுத்துப்பத்து ஊர்ல கெடுக்குற எல்லா கால்நடைகளுக்கும் இந்த காடுதான் ஆதாரம். சனங்களுக்கு நோய்நொடி ஏதும் வந்துருச்சுன்னா காட்டுக்குள்ள இருந்து மூலிக பறிச்சாந்து பண்டுவம் பாத்தாதான் உயிர் பொழைக்கும். காட்டுக்குள்ள போயி சுண்டக்காவும், சுள்ளியும் பொறுக்கித்தான் எங்க வூடுகள்ல அடுப்பெரியும். இந்த காடுதான் எங்கள காத்து நிக்கிற சாமி. அதனால நாங்க யாரும் காட்டுக்குள்ள செருப்பு போடமாட்டோம். மரத்த, சீவரசிகள வேட்டையாட மாட்டோம். யாரவது காட்டுக்கு சேதம் செஞ்சா சாமி தண்டிச்சிரும். இத சொன்ன்னா மூடநம்பிக்கைங்கிறாங்க. பாதுகாப்பு படையோடு துப்பாக்கிகள்த...

நியூட்ரினோ திட்டமும் தீர்ப்பும்

Image
நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ள சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்தும், அதுவரை நியூட்ரினோ ஆய்வு பணிகளை மேற்கொள்ளக் கூடாது எனவும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இது நியூட்ரினோ திட்டத்திற்கே தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று பலராலும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. உண்மை என்னெவெனில் சலிம் அலி என்றோர் நிறுவனம் அம்பரப்பர் மலையில் ஆய்வு மேற்கொண்டு ஒரு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தயார் செய்தது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் அம்பரப்பர் மலையில் வாழும் பல்லுயிரிகளுக்கு பெரியளவில் எந்த பாதிப்புகளும் இருக்காது என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டது. இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் வனத்துறையும் 2011 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு பசுமை தீர்ப்பாயத்திலும் தகவல் அறியும் உரிமை சட்டத்திலும் இயங்கியதன் விளைவாக "சலிம் அலி நிறுவனம் சுற்றுச்சூழல் பற்றி ஆய்வு செய்யவில்லை, அது குறிப்பாக பல்லுயிரிய பெருக்கம் குறித்து மட்டுமே ஆய்வு செய்த...

வெள்ளிமலை கோயில்காட்டை மீட்போம்

Image
இடையப்பட்டி வெள்ளிமலை காடு ஒரு அறிமுகம்:   மதுரை மாவட்டம் வடக்கு வட்டம் , தெற்கு ஆமூர் அஞ்சல் , இடையபட்டி ஊரில் அமைந்துள்ளது வெள்ளிமலை காடு. உசில் மரங்கள் அடர்ந்த காட்டின் மையத்திலுள்ள வெள்ளிமலை என்றோர் குன்றில் கட்டப்பட்டுள்ளது ஆண்டிமுருகன் கோவில். எனவே இதனை வெள்ளிமலை காடு என்று அழைக்கின்றனர். வெள்ளிமலை காட்டை சுற்றி கிழக்கே ஓவாமலை , ஒத்தமலை   மேற்க்கே கருப்புகால் ஊரும் தெற்க்க ே தச்சனேந்தல் ஊரும் வடக்கே இடையபட்டி ஊரும் அமைந்துள்ளது. அரசு வருவாய்துறை பதிவேட்டில் வெள்ளிமலை காடு "தீர்வு ஏற்படாத தரிசு புறம்போக்கு நிலமாக" குறிக்கப்பட்டுள்ளது. இக்காடு 461 ஏக்கர் பரப்பளவு கொண்டது. முன்பு 700 ஏக்கருக்கும் அதிகமாக இருந்ததென்று ஊர் பெரியவர்கள் சொல்லுகின்றனர். ஆடு மேய்ச்சலை தொழிலாக கொண்ட இடையர் குலத்தவர்கள் வாழ்ந்த பகுதி என்பதால் வெள்ளிமலை காடு அமைந்துள்ள ஊர் இடையர்பட்டி என்றும் பின்னாளில் இடையபட்டி என்று அழைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேய்ச்சல் தொழிலை அடிப்படையாக கொண்டவர்களின் வாழ்வாதாரமாக வெள்ளிமலை காடு விளங்குகிறது. வெள்ளிமலை காடு தமிழகத்தில் அரிதாகி வரும் நா...