அம்மரங்களில்லாத.....
இருபுறமும் இருந்த
நிழல்தரும் மரங்களை
இருந்தஇடம் தெரியாமல்
அழித்தாயிற்று.
கூடுதேடி அலைந்த
அணில்களையும் குருவிகளையும்
காடுதேடி போகுமாறு
விரட்டியாயிற்று.
ஒருவேளை பசிதீர
நாள்தோறும் உழைக்கிற
தெருவோர கடைக்காரர்களை
அடியோடு அகற்றியாயிற்று.
சாலையோரங்களில் தூங்கும்
ஆதரவற்ற முதியோர்களை
சாக்கடையோரம்
துரத்தியாயிற்று.
ஓய்வெடுக்கவும்
ஒன்னுக்கடிக்கவும்
ஓரிடம்கூட இல்லாமல்
நகரத்தின் எல்லையை
நரகம்வரை நீட்டியாயிற்று.
எந்திர வாகனங்களால்
ஏழைகள்மீது முன்பினும்
எளிதாக மோத எதுவாக
தார்ச்சாலைகளை
சீராக்கி அகலப்படுத்தியாயிற்று.
நகரமயமாக்கல் என்ற
ஒற்றைச்சொல்லுக்காக
இன்னும்
என்னென்னெ வழிகளில்
கற்பழிக்கப்படபோகிறதோ
எங்கள் ஊர்.
இழுத்துக்கொண்டே போகிறானே
என்று
சலித்துக்கொள்பவர்களுக்கு
இறுதியாய் ஒருசில வரி
அம்மாவை
அம்மணமாய்
பார்த்ததைப்போல்
பதைபதைக்கிறது
அம்மரங்களில்லாத
பழைய பாதைகள்....
- கவிதை நேசன்
Comments
Post a Comment