தமிழ் பல்லுயிர் குடும்பம்

குளம் குட்டையோடு கடம்பம், மருதம், இலுப்பை, பனை, வேங்கை, நாவல், மந்தாரை, கோவை கொடி, கத்தாளை என செடி, கொடி, மரம் சூழ்ந்திருந்த நம் பசுமை ஊர்களை சற்று திரும்பி பாருங்கள்..... நம்மோடு சுற்றி திரிந்த பிள்ளை பூச்சி, புழு, தவளை, தட்டான், வண்ணத்து பூச்சி, மின்மினி, பொன்வண்டு, முயல், நரி, ஓணான், கழுகு, பருந்து, குருவி என எதையும் காணவில்லை. இவ்வுயிர்களை காணும் வாய்ப்பு நம் பிள்ளைகளுக்கு இருக்கிறதா? எத்தனை அழகிய சூழலை நாமும் நம் தலைமுறையும் இழந்திருக்கிறோம் பாருங்கள். தொலைந்து போன இவ்வுயிர்களை கண்டுபிடித்து தரும் கடமை காவல் நிலையங்களுக்கு இல்லை. அதற்க்கு இந்திய சட்டத்தில் இடமுமில்லை. பாரம்பரிய நேசத்தை இழந்து நிற்கும் நம்முடைய சுயநலமும் அலட்சியமும்தான் இந்நிலைக்கு காரணம். அடுத்து வளர்ச்சி என்ற பெயரில் கண்மூடித்தனமாக இயங்கும் ஆளும் வர்க்கம். உலகில் உள்ள பல்லுயிர்களில் வெறும் 14 சதவீத உயிர்களை மட்டும்தான் இதுவரை நாம் கண்டறிந்து பெயர் வைத்திருக்கிறோம் என்றால் நம் சிந்தனைக்கும் கற்பனைக்கும் எட்டாத இயற்கை அன்னையின் மடியில் தவழும் பல்லுயிர் வளம் எத்தகையது என்று எண்ணிப் பாருங்கள். ம...