மகனுக்கு கடிதம் - மரப்பாச்சி பொம்மை

உன் அப்பா எழுதுகிறேன். இன்னும் பிறக்காத அல்லது தத்தெடுக்கபடாத குழந்தைகளின் உடல்நலம் மீது அக்கறை கொண்டுள்ள ஒரு தந்தையின் மொழியில் இந்த கடிதம் மரபாச்சி பொம்மைகள் குறித்து உன்னோடு பேசிக் கொண்டிருக்கும். பல்லாயிரமாண்டு மரபின் நீட்சியை தொலைத்த சமூகத்தின் கதையிது. பக்குவத்தோடு இக்கடிதத்தை படிக்கும் பருவம் உனக்கு வரும் பொழுது இதன் அழுத்தம் அறிவாய். புற்று நோய் தொடங்கி நேற்றுவரை நம் தமிழ்ச்சமூகம் கண்டிராத புது புது நோய்களை பரப்பிக் கொண்டிருக்கும் நெகிழி (பிளாஸ்டிக்) பொம்மைகளை உன் இதழ்கள் சுவைத்து விடலாம். அதன் கொடிய நெடியை நீ முகர்ந்துவிடலாம், எல்லாவற்றுக்கும் மேல் நம்மை தாங்கும் தாய் மண்ணிற்கு இது தகாத விளைவை தருமட கண்ணே! அந்த அச்சம் கூட இந்த கடிதத்தை எழுத காரணமாக இருக்கலாம்.
குழந்தைகளுக்கு உடம்புக்கு முடியமல் போனால் மரபாச்சி பொம்மையை தண்ணியிலிட்டு உரசி நெற்றியில் தேய்க்கும் வழக்கும் நம் மரபில் உண்டு. அப்பேற்பட்ட மருத்துவ குணம் மற்றும் மனிதம் மீது நேசம் நிறைந்தவை நமது மரபு வழி உற்பத்தி பொருட்கள். மரபாச்சி பொம்மைகளை நீ சுவைக்கலாம், கடிக்கலாம், முகரலாம், கட்டி தழுவலாம் எல்லாம் உன் உடல் நலத்திற்கு உகந்தவை. செம்மரம், கருங்காலி போன்ற மூலிகை குணமுடைய மரக்கட்டைகளில்தான் மரப்பாச்சி பொம்மைகளை செய்வார்கள். நாகரீக சமூகத்தின் கேலி, நெடுநாள் போராட்டம், தொலைதூர பயணம், காண்போரிடமெல்லாம் விசாரணை, பொருளாதார நெருக்கடி என நீண்ட தேடலுக்கு பிறகு இன்றுதான் உனக்கென மரபாச்சி பொம்மைகளை வாங்கி இருக்கிறேன். உனக்கும் உனக்கு பின்னான தலைமுறைக்கும் இயற்கை சூழலையும், இயற்கையோடு இணைந்த வாழ்வியலையும் விட்டு செல்வதும் கற்று தருவதும் ஒரு தகப்பனாகிய எனது தலையாய கடமை. இரு தலைமுறைக்கு முன்வரை காலம் காலமாக நம் முன்னோர்கள் இந்த கடமையை நமக்கு செய்து வந்திருக்கிறார்கள். உன் தந்தை ஒரு பழைய காகித கடை வைத்திருப்பவன். கடைக்கு வந்த மரப்பாச்சி பொம்மைகளை எல்லாம் அதன் அருமை பெருமை தெரியாமல் தூக்கி எறிந்து விட்டு, இன்று உனக்கென தேடும் போது என் சமூகமே இந்த பொம்மையை தொலைத்து நிற்கிற அவலத்தை நான் எப்படி சொல்வேன். பல நண்பர்களிடம் கேட்டு, பல இடங்களில் தேடி இறுதியாக சுந்தர்ராஜன் என்பவர் அம்பையில் இந்த பொம்மைகளை செய்து விற்கிறார் என்ற தகவலை இணையத்தில் படித்து, என்னைப்போலவே தன் பிள்ளைக்கும் இயற்கையோடு இணைந்த வாழ்வை கொடுக்கப் போராடும் நண்பர் சுதாகரனால் பரிசளிக்கப்பட்ட பொக்கிஷம் இந்த மரப்பாச்சி பொம்மை. வேப்ப மர கட்டையில் செய்யப்பட பொம்மையிது. தான் அனுபவித்த இயற்கை வாழ்வியல் குறித்து இயற்கை சூழலை இழத்து நிற்கும் எனக்கு சொல்லி தராமல், பொருளாதரத்தை ஈட்டும் ஒற்றை லட்சியாய்த்தொடு ஓடி கொண்டிருக்கும் என் அப்பாவால்தான் இந்த கடிதத்தை உனக்கு எழுதுகிறேன். நீ அறிந்த நல்ல செய்திகளை உலகிற்கு கடத்து. வளர்ந்த அல்லது நவீன அறிவியல் பேசும் எல்லா சமூகங்களிடம் முட்டாள்தனமும் பிற்போக்குகளும் நிறைந்திருக்கின்றன. நாமும் அதற்க்கு விதிவிலக்கல்ல. மெத்த படித்த, ஏன் மருத்துவ படிப்பை முடித்த உன் நண்பன் நாளை மரப்பாச்சி பொம்மையை கேலி செய்யலாம். ஒன்றை மட்டும் நீ நினைவில் கொள். ஏட்டு படிப்பு என்பது வேறு அறிவு என்பது வேறு. நம் முன்னோர்கள் அறிவுடையவர்கள்.
நாணல் நண்பர்களோடு
பாசத்துடன் உன் அப்பா...
கா. கார்த்திக்
12.09.2014, மதுரை
நாணல் குழு நண்பர்களுக்கு என்றும் என் பாராட்டுகள்
ReplyDeleteநாணல் குழு நண்பர்கள் தற்போது. பயணப்பட்டிருக்கும் பாதை சரியான பாதையே. என்றும் என் வாழ்த்துகள்
ReplyDeleteஎனது குழந்தைக்கு 6 மாதங்கள்ஆகின்றன அவளுக்காக நான் மரப்பாச்சி பொம்மையை தேடினேன் எங்கயும் கிடைக்கவில்லை எங்க கிடைக்கும் என்று சொல்லுங்கள்
ReplyDeleteCall 8608266088
Deleteதற்போது சென்னை, மயிலையில் கபாலீஸ்வரர் கோயிலுக்கருகில் உள்ள "கிரி ட்ரேடர்ஸ்" கடையில் மரப்பாச்சி பொம்மைகள் கிடைக்கின்றன.
Deleteஇது original ah sir
Deleteஇது எங்கு கிடைக்கும்
ReplyDelete