Posts

Showing posts from May, 2014

"உழவர்களைத் தேடி" 3வது நிகழ்வு - வத்திராயிருப்பு

Image
ஒளிப்படங்கள் - திரு. மு.பிரசன்னா & திரு. இ.சுதாகரன் மதிப்புக்குரிய திரு. ச.முகேஷ், திரு. ப.பிச்சைமுருகன், திருமதி. இரா.செந்தமிழ் செல்வி, திரு. ந.கோபாலகிருஷ்ணன், திரு. நா.பெருமாள், திரு. கா.கருணாகரன், திரு. பா.சதாசிவராஜா, திரு. வே.இசைமணி, திரு.கு.மணி, திரு. பா.தமிழ்மணி, திரு. மு.தமிழ்செல்வன், திரு.கீர்த்திராஜன் இவர்கள் எல்லாம் யார் என்று கேட்குறீர்களா? நஞ்சை தூவி மண்ணையும் மண்ணுயிர்களையும் அடியோடு கொள்ளும் ஏகாதிபத்திய வேளாண் உற்பத்தி முறையின் அரசியலை புரிந்து கொண்டு, தாய் மண்ணை நேசித்து, பாரம்பரிய இயற்கை வழியில், புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி மண்ணை மீட்டெடுக்க அரும்பாடுபடும்  பெருமக்களில் ஒரு சிறு கூட்டம்.   நஞ்சில்லாத உணவை நமக்கு வழங்க, இயற்கை வழி வேளாண்மையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் உழவர்கள். பசுமை போராளிகள். நாணல் நண்பர்கள் குழு ஒருங்கிணைக்கும் "உழவர்களைத் தேடி" யின் மூன்றாவது நிகழ்வு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு ஊரில் 18.05.2014, ஞாயிறு அன்று நடைபெற்றது. நீர் வற்றாத இருப்பு அதனால் வத்திராயிருப்பு என்று இவ்வூருக்கு பெயர் மரு...

சிவரக்கோட்டை - அழியும் பசுமை சூழல்

Image
இந்த கிரமத்த, கடைசியா ஒருதரம் பார்த்துக்கோங்க... மதுரையில் உள்ள அழகிய கிராமங்கள், பல்லுயிர் சூழல் அழிய போகிறது. கடைசியா ஒருதரம் பார்த்துக்கோங்க.  "மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை, கரிசல்காளம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 1478.71 ஏக்கர் விவசாய நிலங்களை சிப்காட்டிற்கு எடுக்கும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலங்கள் விவசாய நிலமாய் இல்லை என்ற அரசு நிர்வாக அதிகாரிகளின் கூற்றுகளை பல குழுக்கள் நேரடியாக கள ஆய்வு செய்து பொய் என்று நிரூபித்துள்ளன. கம்பு, வரகு, சோளம், பருத்தி, துவரை, மொச்சை, பச்சைப்பயிர், சுண்டல், ஓமம் போன்ற 30க்கும் மேற்பட்ட உணவுத்தானியப் பொருட்கள் தற்போதும் சாகுபடி செய்து வரும் இந்த பூமியில் நித்ய கல்யாணி, அவுரி போன்ற மூலிகைப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. கரிசல்காளம்பட்டியில் சிவரக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 1 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு அவரி மானியம், தேசிய மூலிகை பயிர் இயக்கம், மாவட்ட இயக்குநர் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதே போல, ச...

மனிதாபிமானம்

Image
தாயை பிரிந்து மழலையாக காடு கடத்தப்பட்டேன். உறவு, சூழல் இழந்து அனாதையாக வளர்ந்தேன். மலர்ந்து கிடக்க இயலாமல் - மனையில் மடக்கி படுத்து கிடந்தேன். காலில் சங்கிலி இறுக்க கைதியாகி காலம் கழித்தேன். ஊர் நெடுக நடந்து நடந்து யாருக்கவோ பிச்சையேடுத்தேன். கால் கடுக்க பருத்த உடலோடு கல்யாண பந்தலில் நின்றிருந்தேன். புணர்தல் இச்சை கொள்ளாமல் பூப்பெய்தி கிழவியானேன். ஊசி அங்குசம் கிழிக்க வலியில் நானும் துடித்திருந்தேன். ஒருநாள் பொறுமையிழந்து மிதித்தேன். நசுங்கிய பாகனை பார்த்து உங்கள் மனதில் வழிந்தது பாருங்கள்.... அந்த உணர்ச்சிக்கு பெயர் "மனிதாபிமானம்" ---தமிழ்தாசன்---

கூடு

Image
அடைத்திருந்த அலமாரியை நெடுநாள் கழித்து திறக்க அணைத்துக்கொண்டு உறங்கியபடியிருந்தன மூன்று அணில்பிள்ளைகள். இதயத்துடிப்பு இரட்டிப்பாக ஆவலுடன் எடுத்து உள்ளங்கைக்குள் வைத்துக்கொள்கிறேன் அதிலொன்றை. ஈரம் காய்ந்து ஈரொரு நொடிகளான அதன் சருமத்தில் அழுத்தி முத்தமிட்டேன். எனையறியாமல் என்கண்கள் பிதுக்கிய நீர்த்துளி சிறுமயிரில்பட்டுவிட சிலிர்த்தெழுந்து மோப்பமிட்டு மீண்டும் சுருண்டுறங்கும் அதை கூட்டுக்குள்விட மனமில்லை. எப்போது இறக்கிவிடுவானென்று என்னையே பார்த்திருக்கும் தாயணிலின் பதைபதைப்பு நினைவுக்குவர நீண்ட மௌனதிற்குப்பின் அலுங்காமல் வைத்துவிட்டேன் அதனிடத்தில். நம்பவே முடியவில்லை நரைகூடிக் கிழப்பருவமெய்திய நான்மட்டும்வாழும் இவ்வீடு நான்கு உயிர்களுக்கு கூடானதை. அந்த அணில்கள் இருக்கும்வரை நான் அனாதையில்லை.  - கவிதை நேசன்

அம்மரங்களில்லாத.....

Image
இருபுறமும் இருந்த நிழல்தரும் மரங்களை இருந்தஇடம் தெரியாமல்   அழித்தாயிற்று. கூடுதேடி அலைந்த அணில்களையும் குருவிகளையும் காடுதேடி போகுமாறு விரட்டியாயிற்று. ஒருவேளை பசிதீர நாள்தோறும் உழைக்கிற தெருவோர கடைக்காரர்களை அடியோடு அகற்றியாயிற்று. சாலையோரங்களில் தூங்கும் ஆதரவற்ற முதியோர்களை சாக்கடையோரம் துரத்தியாயிற்று. ஓய்வெடுக்கவும் ஒன்னுக்கடிக்கவும் ஓரிடம்கூட இல்லாமல் நகரத்தின் எல்லையை நரகம்வரை நீட்டியாயிற்று. எந்திர வாகனங்களால் ஏழைகள்மீது முன்பினும் எளிதாக மோத எதுவாக தார்ச்சாலைகளை சீராக்கி அகலப்படுத்தியாயிற்று. நகரமயமாக்கல் என்ற ஒற்றைச்சொல்லுக்காக இன்னும் என்னென்னெ வழிகளில் கற்பழிக்கப்படபோகிறதோ எங்கள் ஊர். இழுத்துக்கொண்டே போகிறானே என்று சலித்துக்கொள்பவர்களுக்கு இறுதியாய் ஒருசில வரி அம்மாவை அம்மணமாய் பார்த்ததைப்போல் பதைபதைக்கிறது அம்மரங்களில்லாத பழைய பாதைகள்.... - கவிதை நேசன்

நரசிங்கம்பட்டி - நம்ம வரலாறு

Image
நம்ம வரலாறு 2வது நிகழ்வு இந்த முறை மேலூர் அருகே உள்ள நரசிங்கம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. நம்ம வரலாறு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு. கான்சா சாதிக் அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைக்க, ஓவியர் திரு. சுகுமாரன் அவர்களும்,  நரசிங்கம்பட்டி ஊரை சேர்ந்த எழுத்தாளர் திரு. இளங்கோ கல்லணை அவர்களும் வழி நடத்தினார்கள். ஒளிப்படம் - திரு. மு. பிரசன்னா நரசிங்கம்பட்டி: மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேலூர் செல்லும் வழியில் உள்ளது நரசிங்கம்பட்டி கிராமம். மீனாட்சிபுரம், அரிட்டாபட்டி கிராமங்களுக்கு இடையில், மதுரையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள அழகிய கிராமம் நரசிங்கம்பட்டி. துணை மின் நிலையம் ஒன்றும் நரசிங்கம்பட்டி ஊராட்சியில் இயங்கி வருகிறது. பாதுகாக்கபட்ட காட்டு பகுதியான பெருமாள் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டு பகுதி நரசிங்கம்பட்டி. நாயக்கர் ஆட்சிக்கு முன்பு நரசிங்கம்பட்டி கிராமம் பழையூர் என்று அழைக்கபெற்றதாக கூறுகிறார் எழுத்தாளர் திரு. இளங்கோ கல்லணை. 5000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு, 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த சித்திர சாவடி, பெருமாள் கோவில் என பாரம்பரிய பெருமைகளோடு திகழ்கி...

உழவர்களைத் தேடி - ஏன்?

Image
ஒளிப்படங்கள் - திரு. பாடுவாசி  இயற்கை வழி வேளாண்மையில் ஈடுபட்டு வரும் 11 உழவர்களை மேடை ஏற்றி கௌரவிக்கும் "உழவர்களைத் தேடி" 2வது நிகழ்வு அண்மையில் 20.04.2014 அன்று மதுரை, திருமங்கலம் வட்டத்தில் உள்ள பெரிய பொக்கமபட்டி கிராமத்தில்  நடைபெற்றது.   நாணல் நண்பர்கள் குழு மாதந்தோறும் நடத்தி வரும் உழவர்களைத் தேடி நிகழ்வு என்ன நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது?" என்று உழவர்களைத் தேடி நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு. இரா. பூபாளன் அவர்களிடம் கேள்வியை தோழமை இயக்கத்தை சேர்ந்த நண்பர்கள் எழுப்பினார்கள்.  அதற்க்கு அவர் "இந்திய வேளாண் கொள்கைகளையோ, அரசியல் மாற்றத்தையோ "உழவர்களைத் தேடி" என்கிற இந்த நிகழ்வு உடனடியாக மாற்றப் போவதில்லை. எனில் எதற்காக இப்படியொரு வீண் செயல் என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. ஐயா நம்மாழ்வார் மறைவு நமக்கு நிறைய பொறுப்புகளை விட்டுச் சென்று இருக்கிறது. ஐயாவின் மாணவனாக உழவர்களைத் தேடி நிகழ்வை கட்டியமைத்திருக்கிறோம். உழவர்களைத் தேடி என்கிற இந்நிகழ்வு இயற்கை வழி வேளாண்மையை பரப்பும் தொடர் இயக்கமாக மக்களிடையே பரப்பும் பணியை மேற்கொள்ளும். அதன் நோக்க...

மழையில் நனையும் மதுரையின் கவனத்திற்கு

Image
எதிர்பாராத விதமாக இந்த கோடை காலத்தில் கொட்டி தீர்க்கிறது மழை. இன்று (30.4.2014) பெய்த மழையால் மதுரை வலைவீசி தெப்பம் நிறைந்திருக்கனும், கிருஷ்ணராயர் தெப்பம் நிறைந்திருக்கனும், சம்பக்குளம் ஊரணி நிறைந்திருக்கனும். ஆனால் மதுரையின் சாபக்கேடு வலைவீசி தெப்பம் பெரியார் பேருந்து நிலையமாகவ ும், கிருஷ்ணராயர் தெப்பம் ஞாயிறு சந்தையாகவும், சம்பக்குளம் ஊரணி காவல்த்துறை கண்காணிப்பாளர் அலுவலகமாகவும் மாறி நெடுநாள் ஆகிவிட்டது. மாவட்ட நீதிமன்றம் எங்கே இருக்கிறது? செங்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரை மாநகராட்சி அலுவலகம் எங்கே இருக்கிறது? தல்லாகுளம் கண்மாயில் இருக்கிறது. இப்போ சொல்லுங்க.. தண்ணீருக்கு தெரு தெருவாக அலைகிற நாம எங்கே இருக்கிறோம்? வேறெங்கே நடு ரோட்டில் இருக்கிறோம். இப்படியாக நாம் இழந்த நீர்நிலைகள் மதுரையில் மட்டும் 20துக்கும் அதிகம். அதன் விளைவு நிலத்தடி நீர் 1000 அடிக்கும் கீழாக சென்றுவிட்டது. மாதம் ரூபாய் 1000 முதல் 3000 வரை தண்ணீருக்கே செலவழிக்க வேண்டிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது நடுத்தர குடும்பங்கள். தண்ணீருக்கு பணம் செலவழிக்க இயலாத குடும்பங்கள் ஊரை காலி செய்ய வேண்...