வெள்ளிமலைக் காடு - ஒரு அறிமுகம்
இந்திய பசுமை வேலி ஒரு பார்வை:
தமிழகத்தின் 1,30,058 சதுர கி.மீ மொத்த பரப்பில் 22,643 சதுர கி.மீ. மட்டுமே காடுகள் உள்ளன. அதாவது நிலபரப்பில் 15 சதவீதம். அதில் 3,305 சதுர கி.மீ. அதாவது வெறும் 2.5 சதவீதம் மட்டுமே பாதுகாக்கப்பட்ட காடுகளாக உள்ளது. சுற்றுச்சூழல் சமநிலையுடன் சமூகம் சம ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் 33% காடுகள் இருக்க வேண்டும். வனப்பரப்பில் இந்தியாவிலுள்ள மாநிலங்களில் தமிழகம் 14வது இடத்தில் உள்ளது.
காடுகள் சீரழிவே பூமியை வெப்பமடைய செய்யும் பசுங்குடில் வாயு வெளியீட்டில் 20 சதவீதத்துக்கு காரணம். வளிமண்டல பசுங்குடில் பாதிக்கப்பட்டு ஓசோன் படல ஓட்டை விரிவடைகிறது. அதனால் வெப்பம் அதிகரித்து பனிமலை உருகத் தொடங்குகிறது. பனிமலை உருகி கடல் அடியில் உள்ள நீரோட்டத்தில் கலந்துவிடுகிறது. கடல் மட்டம் அதிகரித்து, நீரோட்டம் மாறி, பருவ மழை தப்பிப் போய்விடுகிறது. பூமியில் எதிர்பாராத அதிக வறட்சியும் அதிக புயல் மழை வெள்ளமும் ஏற்படுவதக்கு இதுவே காரணம். புவியை வெப்படமடையச் செய்யும் கார்பன்டை ஆச்சைடை கிரகித்துக் கொள்ளும் மரங்களை வெட்டுவதுதான் இது நடப்பதற்கு காரணம். வளிமண்டலத்தில் உள்ளதைப் போல இரண்டு மடங்கு கார்பனை (1Trillion Ton Carbon) காடுகளும் காட்டு மண்ணும் சேகரித்து வைத்துள்ளதாக உலக விவசாய நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
அழிந்து வரும் பல்லுயிரியம்:
தொடர் காடழிப்பால் பூமியின் மொத்த பரப்பில் 14 சதவீதமாக இருந்த மழைக்காடுகள் தற்போது 6 சதவீதம் மட்டுமே இருப்பதாக கணக்கிடுகிறார்கள். உலக முழுவதும் தாவரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என நாளொன்றுக்கு 137 வகையான உயிரினங்களை நாம் இழந்து கொண்டிருப்பதாக கணக்கிடுகிறார் அமெரிக்க உயிரியல் நிபுணர் எட்வர்ட். ஒ. வில்சன்.
சிவிங்கப்புலி, குள்ளநரி, ஹொக்கேனக்கல் அருகே இருந்த வரகு கோழி, கழிமுகங்களில் இருந்த உப்புநீர் முதலை, காவிரியில் இருந்த மயில் கொண்டை மீன், கருப்பு கொண்டை மீன் என நம் கண்முன்னே அழிந்துவிட்ட உயிரினங்கள் அதிகம் என்று பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன்.
மதுரை வனப்பகுதி:
"மதுரையில் இன்றைய காடுகளின் பரப்பளவு வெறும் 11 சதவீதம்தான். இந்தியாவின் காடு பரப்பளவு 20 சதவீதம், தமிழகத்தின் காடு பரப்பளவு 15 சதவீதம் ஒப்பீடளவில் மதுரையின் பசுமை வேலி மிக மிக குறைவு. நகரெங்கும் நட்டு வைத்த மரக்கன்றுகளில் 20 சதவீத கன்றுகள்தான் மரமாக வளர்கிறது. ஆனால் மதுரையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் 10 சதவீத வளர்ந்த மரங்களை இழந்து கொண்டே வருகிறோம். மதுரையின் நகர வளர்ச்சி மரங்களை வெட்டுவதில் இருந்தே தொடங்குகிறது" என்கிறார் மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரி திரு. மாரிமுத்து. நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதிலும் மரங்களை, காடுகளை அழிப்பதிலும் இருந்துதான் தொடங்குகிறது மதுரையின் நகர வளர்ச்சி. இந்த கூற்று பெரும்பாலும் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். நகர வளர்ச்சி 9 சதவீதம் என்றால் 1 சதவீதம் இயற்கை வளங்களின் வீழ்ச்சி இருக்கும். ஆனால் இந்தியாவை பொருத்த மட்டில் 9 சதவீத வளர்ச்சிக்கு 5 முதல் 7 சதவீத இயற்கை வளங்களை பலி கொடுக்கிறது ஆளும் வர்க்கம் என்கிறார் அருந்ததி ராய். இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரமாக மதுரை மாறிவிடும். அதற்க்கான அறிகுறியை நாம் இன்று உணர்ந்து கொண்டிருக்கிறோம். நம்மால் காடுகளை உருவாக்க முடியாது, பாதுகாக்கவே முடியும். மதுரையின் காடுகள் என்றால் சிறுமலை, கிழுவமலை, வவுதுமலை எழுமலை, நாகமலை, அழகர்மலை, பெருமாள் மலை மட்டும்தான் நமக்கு தெரியும். காரணம் இந்த வனப்பகுதி எல்லாம் வனத்துறை கட்டுபாட்டில் உள்ளது. வனத்துறையின் கீழ் இல்லாத ஒரு பெரிய வனப்பகுதி மதுரையில் தற்போது நமக்கு தெரியாமல் அழிக்கப்பட்டு வருகிறது. அதுதான் வெள்ளிமலைக் காடு.
வெள்ளிமலைக் காடு - ஒரு அறிமுகம்:
மதுரை மாவட்டம் வடக்கு தாலுக்கா, தெற்கு ஆமூர் அஞ்சல், இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது வெள்ளிமலை காடு. மதுரை வருவாய்துறை அரசு பதிவேட்டில் வெள்ளிமலை காடு "தீர்வு ஏற்படாத தரிசு புறம்போக்கு நிலமாக" உள்ளது. இக்காடு 461 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வெள்ளிமலை ஆண்டிக்கோவில் சுற்றி அமைந்துள்ளதால் இக்காட்டு பகுதியை வெள்ளிமலை காடு என்று அழைக்கின்றனர். ஆடு மேய்ச்சலை தொழிலாக கொண்ட இடையர் குலத்தவர்கள் வாழ்ந்த பகுதி என்பதால் வெள்ளிமலை காடு அமைந்துள்ள கிராமம் இடையர்பட்டி என்றும் பின்னாளில் இடையபட்டி என்று அழைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சேங்காய் ஊரணி, தண்ணித்தாவு கண்மாய் போன்ற நீர்நிலைகளை தன்னகத்தே கொண்டுள்ளது வெள்ளிமலைக்காடு. இடையபட்டி, தெற்கு ஆமூர், சொருக்குளிப்பட்டி ஆகிய மூன்று ஊரை சேர்ந்த பெரியவர்கள் ஒன்றுகூடி 1 நபருக்கு 1 மரக்கா நெல் என்கிற வீதம் 10 பேரை காட்டுக்கு காவல் போட்டு காட்டை பாதுகாத்தனர். அதனால் பச்சை மரங்கள் வெட்டவோ உயிரினங்களை வேட்டை யாடவோ யாரும் அனுமதிக்கபடுவதில்லை. வெள்ளிமலை ஆண்டிச்சாமி (முருகன்) கோவிலோடு தொடர்புடைய காடு என்பதால் அங்குள்ள மக்கள் பயபக்தியோடு காட்டுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாதவாறு கிராமத்தின் கட்டுபாட்டை ஏற்று நடந்தனர். கிராமத்தின் கட்டுபாட்டில் இருந்தவரை காடு காடாக இருந்தது. மான், நரி, தேவாங்கு, உடும்பு, பாம்பு, கீறி, முயல், மயில், ஆள்காட்டி பறவை, காடை, கௌதாரி, கரையான், சிலந்தி என பல்லுயிர் பெருகி கிடந்தது வெள்ளிமலைக் காடு. பார்க்க புதர் காடு போன்று உள்ள வெள்ளிமலை காட்டில் உசில் மரங்களே பிரதானம். மேலும் திருகு கள்ளி, விராலிச் செடி, காட்டு எலுமிச்சை, பிரண்டை, அமரிப்புல், ஆவாரம், ஆரக்கீரை, பள்ளிப்பூண்டு போன்ற எண்ணற்ற தாவர வகைகளை இக்காட்டில் காணலாம். பல நூற்றாண்டுகளுக்கு முன் நதிகள் பாய்ந்து அரித்த மலைப்பாறை போன்ற பாறை படிமங்கள் இக்காட்டின் புவியியல் அமைப்புக்கு கூடுதல் சிறப்பு. இக்காட்டின் தன்மையை வறண்ட இலையுதிர் காடுகள் (Dry Decidious Forest) என்று குறிப்பிடுகிறார் மதுரை தியாகராயர் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் திரு. பாபு ராஜ்.
தமிழ்தாசன்
நாணல் நண்பர்கள் குழு
9543663443
மதுரையின் காடுகள் இயற்கை அமைப்பு பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் நம் இந்தியாவின் பசுமை பரப்பு பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம். படித்த மற்றும் களத்தில் திரட்டிய தகவல்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். நாணல் வெளியிட்டிருக்கும் இந்த கட்டுரை இந்திய வனம், காட்டுயிர் மற்றும் வெள்ளிமலை காடு குறித்த ஒரு தொடக்க நிலை அறிமுகத்தை உண்டாக்கும் என்று நம்புகிறோம். இந்திய மலைப் பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கும் (66.7%), மொத்த பரப்பில் மூன்றில் ஒரு பங்கும் (33%) காடு இருக்க வேண்டும் என்பது நமது தேசிய வனக் கொள்கை (1988). 33 சதவீதம் இருக்க வேண்டிய காடுகள் இன்று இந்தியாவின் மொத்த நிலபரப்பில் 20 சதவீதம்தான் காடாக இருக்கிறது. எஞ்சியுள்ள அந்த 20 சதவீத காடுகளும் பெருமளவு துண்டாக்கப்பட்டு, வளமற்ற காடுகளாக உள்ளன என்பது நாம் கவலைப்பட வேண்டிய செய்தி.
தமிழகத்தின் 1,30,058 சதுர கி.மீ மொத்த பரப்பில் 22,643 சதுர கி.மீ. மட்டுமே காடுகள் உள்ளன. அதாவது நிலபரப்பில் 15 சதவீதம். அதில் 3,305 சதுர கி.மீ. அதாவது வெறும் 2.5 சதவீதம் மட்டுமே பாதுகாக்கப்பட்ட காடுகளாக உள்ளது. சுற்றுச்சூழல் சமநிலையுடன் சமூகம் சம ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் 33% காடுகள் இருக்க வேண்டும். வனப்பரப்பில் இந்தியாவிலுள்ள மாநிலங்களில் தமிழகம் 14வது இடத்தில் உள்ளது.
காடுகள் சீரழிவே பூமியை வெப்பமடைய செய்யும் பசுங்குடில் வாயு வெளியீட்டில் 20 சதவீதத்துக்கு காரணம். வளிமண்டல பசுங்குடில் பாதிக்கப்பட்டு ஓசோன் படல ஓட்டை விரிவடைகிறது. அதனால் வெப்பம் அதிகரித்து பனிமலை உருகத் தொடங்குகிறது. பனிமலை உருகி கடல் அடியில் உள்ள நீரோட்டத்தில் கலந்துவிடுகிறது. கடல் மட்டம் அதிகரித்து, நீரோட்டம் மாறி, பருவ மழை தப்பிப் போய்விடுகிறது. பூமியில் எதிர்பாராத அதிக வறட்சியும் அதிக புயல் மழை வெள்ளமும் ஏற்படுவதக்கு இதுவே காரணம். புவியை வெப்படமடையச் செய்யும் கார்பன்டை ஆச்சைடை கிரகித்துக் கொள்ளும் மரங்களை வெட்டுவதுதான் இது நடப்பதற்கு காரணம். வளிமண்டலத்தில் உள்ளதைப் போல இரண்டு மடங்கு கார்பனை (1Trillion Ton Carbon) காடுகளும் காட்டு மண்ணும் சேகரித்து வைத்துள்ளதாக உலக விவசாய நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
அழிந்து வரும் பல்லுயிரியம்:
தொடர் காடழிப்பால் பூமியின் மொத்த பரப்பில் 14 சதவீதமாக இருந்த மழைக்காடுகள் தற்போது 6 சதவீதம் மட்டுமே இருப்பதாக கணக்கிடுகிறார்கள். உலக முழுவதும் தாவரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என நாளொன்றுக்கு 137 வகையான உயிரினங்களை நாம் இழந்து கொண்டிருப்பதாக கணக்கிடுகிறார் அமெரிக்க உயிரியல் நிபுணர் எட்வர்ட். ஒ. வில்சன்.
சிவிங்கப்புலி, குள்ளநரி, ஹொக்கேனக்கல் அருகே இருந்த வரகு கோழி, கழிமுகங்களில் இருந்த உப்புநீர் முதலை, காவிரியில் இருந்த மயில் கொண்டை மீன், கருப்பு கொண்டை மீன் என நம் கண்முன்னே அழிந்துவிட்ட உயிரினங்கள் அதிகம் என்று பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன்.
மதுரை வனப்பகுதி:
"மதுரையில் இன்றைய காடுகளின் பரப்பளவு வெறும் 11 சதவீதம்தான். இந்தியாவின் காடு பரப்பளவு 20 சதவீதம், தமிழகத்தின் காடு பரப்பளவு 15 சதவீதம் ஒப்பீடளவில் மதுரையின் பசுமை வேலி மிக மிக குறைவு. நகரெங்கும் நட்டு வைத்த மரக்கன்றுகளில் 20 சதவீத கன்றுகள்தான் மரமாக வளர்கிறது. ஆனால் மதுரையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் 10 சதவீத வளர்ந்த மரங்களை இழந்து கொண்டே வருகிறோம். மதுரையின் நகர வளர்ச்சி மரங்களை வெட்டுவதில் இருந்தே தொடங்குகிறது" என்கிறார் மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரி திரு. மாரிமுத்து. நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதிலும் மரங்களை, காடுகளை அழிப்பதிலும் இருந்துதான் தொடங்குகிறது மதுரையின் நகர வளர்ச்சி. இந்த கூற்று பெரும்பாலும் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். நகர வளர்ச்சி 9 சதவீதம் என்றால் 1 சதவீதம் இயற்கை வளங்களின் வீழ்ச்சி இருக்கும். ஆனால் இந்தியாவை பொருத்த மட்டில் 9 சதவீத வளர்ச்சிக்கு 5 முதல் 7 சதவீத இயற்கை வளங்களை பலி கொடுக்கிறது ஆளும் வர்க்கம் என்கிறார் அருந்ததி ராய். இந்த நிலை தொடர்ந்தால் விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரமாக மதுரை மாறிவிடும். அதற்க்கான அறிகுறியை நாம் இன்று உணர்ந்து கொண்டிருக்கிறோம். நம்மால் காடுகளை உருவாக்க முடியாது, பாதுகாக்கவே முடியும். மதுரையின் காடுகள் என்றால் சிறுமலை, கிழுவமலை, வவுதுமலை எழுமலை, நாகமலை, அழகர்மலை, பெருமாள் மலை மட்டும்தான் நமக்கு தெரியும். காரணம் இந்த வனப்பகுதி எல்லாம் வனத்துறை கட்டுபாட்டில் உள்ளது. வனத்துறையின் கீழ் இல்லாத ஒரு பெரிய வனப்பகுதி மதுரையில் தற்போது நமக்கு தெரியாமல் அழிக்கப்பட்டு வருகிறது. அதுதான் வெள்ளிமலைக் காடு.
![]() |
ஒளிப்படம் - திரு. இரா. பிரபாகரன் |
மதுரை மாவட்டம் வடக்கு தாலுக்கா, தெற்கு ஆமூர் அஞ்சல், இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது வெள்ளிமலை காடு. மதுரை வருவாய்துறை அரசு பதிவேட்டில் வெள்ளிமலை காடு "தீர்வு ஏற்படாத தரிசு புறம்போக்கு நிலமாக" உள்ளது. இக்காடு 461 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வெள்ளிமலை ஆண்டிக்கோவில் சுற்றி அமைந்துள்ளதால் இக்காட்டு பகுதியை வெள்ளிமலை காடு என்று அழைக்கின்றனர். ஆடு மேய்ச்சலை தொழிலாக கொண்ட இடையர் குலத்தவர்கள் வாழ்ந்த பகுதி என்பதால் வெள்ளிமலை காடு அமைந்துள்ள கிராமம் இடையர்பட்டி என்றும் பின்னாளில் இடையபட்டி என்று அழைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சேங்காய் ஊரணி, தண்ணித்தாவு கண்மாய் போன்ற நீர்நிலைகளை தன்னகத்தே கொண்டுள்ளது வெள்ளிமலைக்காடு. இடையபட்டி, தெற்கு ஆமூர், சொருக்குளிப்பட்டி ஆகிய மூன்று ஊரை சேர்ந்த பெரியவர்கள் ஒன்றுகூடி 1 நபருக்கு 1 மரக்கா நெல் என்கிற வீதம் 10 பேரை காட்டுக்கு காவல் போட்டு காட்டை பாதுகாத்தனர். அதனால் பச்சை மரங்கள் வெட்டவோ உயிரினங்களை வேட்டை யாடவோ யாரும் அனுமதிக்கபடுவதில்லை. வெள்ளிமலை ஆண்டிச்சாமி (முருகன்) கோவிலோடு தொடர்புடைய காடு என்பதால் அங்குள்ள மக்கள் பயபக்தியோடு காட்டுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாதவாறு கிராமத்தின் கட்டுபாட்டை ஏற்று நடந்தனர். கிராமத்தின் கட்டுபாட்டில் இருந்தவரை காடு காடாக இருந்தது. மான், நரி, தேவாங்கு, உடும்பு, பாம்பு, கீறி, முயல், மயில், ஆள்காட்டி பறவை, காடை, கௌதாரி, கரையான், சிலந்தி என பல்லுயிர் பெருகி கிடந்தது வெள்ளிமலைக் காடு. பார்க்க புதர் காடு போன்று உள்ள வெள்ளிமலை காட்டில் உசில் மரங்களே பிரதானம். மேலும் திருகு கள்ளி, விராலிச் செடி, காட்டு எலுமிச்சை, பிரண்டை, அமரிப்புல், ஆவாரம், ஆரக்கீரை, பள்ளிப்பூண்டு போன்ற எண்ணற்ற தாவர வகைகளை இக்காட்டில் காணலாம். பல நூற்றாண்டுகளுக்கு முன் நதிகள் பாய்ந்து அரித்த மலைப்பாறை போன்ற பாறை படிமங்கள் இக்காட்டின் புவியியல் அமைப்புக்கு கூடுதல் சிறப்பு. இக்காட்டின் தன்மையை வறண்ட இலையுதிர் காடுகள் (Dry Decidious Forest) என்று குறிப்பிடுகிறார் மதுரை தியாகராயர் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் திரு. பாபு ராஜ்.
![]() |
செய்தி - 07.02.2014 The Hindu (Metro Plus, Madurai ) |
வெள்ளிமலை காடு இன்றைய நிலை :
இந்தோ - திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை (IDBP) முகாம் 50 ஏக்கர் காட்டையும், மத்திய பாதுகாப்பு காவல் படை (CRPF) முகாம் 50 ஏக்கர் காட்டையும், தமிழ்நாடு காவல் படை பள்ளி 75 ஏக்கர் காட்டையும் அழித்து ஆக்கிரமித்துவிட்டது. 100 ஏக்கரில் சர்வதேச மருத்துவ பரிசோதனை கூடம் அமைக்க திட்டம் அரசுக்கு அனுப்பட்டுள்ளது. வெள்ளிமலை கோவிலுக்கு 25 ஏக்கர் காட்டு பரப்பை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள வனப் பகுதியை மத்திய அரசும் மாநில அரசும் எடுத்துக் கொண்டது. இப்போது எஞ்சியிருப்பதோ 120 ஏக்கரும் குறைவான காட்டு பகுதி மட்டுமே. இதனால் மேய்ச்சல் நிலம் குறைந்து கால்நடை வளர்ப்பு செய்து வந்த அப்பகுதி மக்களின் வாழவதாரம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. காட்டின் கிழக்கு பக்கம் உள்ள கிரனைட் குவாரிகளில் இருந்து வெகுண்டெழுந்து வரும் வெடி சத்தமும் அரசு காவல் படை முகாம்களில் இருந்து வருகிற துப்பாக்கி சுடு சத்தமும் வன உயிர்களின் வாழ்வியல் சூழலை மேலும் கேள்விக்குள்ளாக்கிறது.
காடு சுருங்கி, வாழும் சூழல் பாதிக்கப்பட்டதால் கூட்டம் கூட்டமாக வெள்ளிமலை காட்டில் திரிந்த நரியும் மானும் தேவாங்கும் ஒன்றுகூட இன்று இல்லை என்பது வேதனையின் உச்சம். 1972 வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டப்படி, பாதுகாக்கப்பட்ட பட்டியலில் தேவாங்கு சேர்க்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேவாங்கு இந்திய மற்றும் இலங்கையில் மட்டுமே வாழக்கூடிய உயிரினம். IUCN என்கிற சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு தேவாங்கை அழிந்து வருகிற உயிரினமாக அறிவித்திருக்கிறது. தற்போது எஞ்சியுள்ள வெள்ளிமலை காட்டில் 50 க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் 30க்கும் மேற்பட்ட பூச்சி இனங்களும் இருப்பதாக ஆய்வு செய்திருக்கிறார் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் கண் மருத்துவர் மற்றும் பறவை ஆர்வலர் திரு. பத்ரி நாராயணன். மரம், செடி, கொடி, புல், புதர், ஒட்டுண்ணி, நீர் தாவரம் என 100க்கும் மேற்பட்ட தாவர வகைகள் வெள்ளிமலை காட்டில் இன்றும் இருப்பதாக கண்டறிந்து சொல்கிறார் தியாகராயர் கல்லூரியின் ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர், திரு. பாபு ராஜ். நரி, தேவாங்கு, பாம்புகள், முயல்கள் இன்றும் காட்டில் வாழுவதாக கூறுகிறார்கள் இடையபட்டி கிராம பொதுமக்கள்.

செய்தி - 24.03.2014 The Hindu |
வெள்ளிமலை காடு அழிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகள்:
1. காடு சுருங்கியதன் காரணமாக சுள்ளி பொறுக்கும் தொழில், அரப்பு மற்றும் காட்டு மூலிகை தயாரிக்கும் வேலை, மேய்ச்சல் நிலத்தை நம்பிய கால்நடை வளர்ப்பு, விவசாயம் போன்ற கிராமத்தின் பாரம்பரிய தொழில்கள் அற்று போயிருக்கிறது.
2. கிராமத்தின் பாரம்பரிய தொழில்கள் அழிந்துவிட்டதால் நகரங்களுக்கு கூலி தொழிலார்களாக இடம் பெயர வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளபட்டிருகிறார்கள்.
3. நீர்பிடி பகுதியான காடுகள் அழிக்கப்பட்டதால் வெள்ளிமலை காட்டை சுற்றியிருந்த கண்மாய், ஊரணி போன்ற நீர்நிலைகள் விரைவில் வற்றி போனது. நிலத்தடி நீர் பாதிப்புக்குள்ளானது. நீரை நம்பியிருந்த விவசாயம் குறைந்து விட்டது.
4. மான், நரி, தேவாங்கு, பூச்சி, பறவை உள்ளிட்ட உயிரினங்கள் அழிவுக்கு காரணம்.
5. பல கொடி ருபாய் மதிப்பிலான மரங்கள், மூலிகை புதையலான காடு இழப்பு. எத்தனை கோடி ரூபாய் செலவு செய்தாலும் இயற்கையான ஒரு விதையைக் கூட நம்மால் உருவாக்க முடியாது.
6. காடழிப்பின் காரணமாக காடுகளில் இருந்த பூச்சிகள், வண்டுகள் அருகில் உள்ள வயல்வெளிகளுக்கு வந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது.
7. சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து, மக்களுக்கு சுகாதார உடல் நல சீர்கேடுகளை உண்டாக்குகிறது.

செய்தி - 25.03.2014 The Indian Express |
வெள்ளிமலை காடு அழிக்கபடுவதால் எதிர் வரும் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள்:
1. காடு அழிந்து நகரம் உருவாகும் போது கிராம கட்டமைப்பு உடையும்.
2. காடுகள் அழிக்கப்பட்ட இவ்விடம் மொட்ட பாறைகள் நிறைந்த பாலைவனமாக காட்சியளிக்கும். ஏற்கனவே மரங்கள் குறைந்து நிலத்தடி நீர் வற்றி பாலைவனமாக மாறி கொண்டே இருக்கிறது மதுரை.
3. வெள்ளிமலை காடு அழிக்கபடுவதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும். முதலில் வெப்பம் அதிகரிக்கும். அதனை தொடர்ந்து வரும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை நாம் அறிவோம்.
4. காடுகள்தான் நீர்பிடி பகுதியாக விளங்குகிறது. காடுகள் அழிக்கபடுவதன் மூலம் அருகில் உள்ள ஓடை, கண்மாய், ஊரணி போன்ற நீர்நிலைகள் வற்றி போகும். மேலும் மண் அரிப்பு ஏற்பட்டு அது அருகில் உள்ள நீர்நிலைகளில் சேகாரமாகும். மண் மேவி நீர்நிலைகளின் கொள்ளளவு குறைந்து விடுகிறது. ஒரு கண்மாய் வற்றினால் அதன் வெளிபோக்கு கால்வாயோடு தொடர்புடைய அத்தனை கண்மாய்களும் வற்றி போகும். அதனை நம்பியுள்ள விவசாயம் கேள்விக்குள்ளாகும். அதனால் வறட்சியையும் மிகப் பெரிய தண்ணீர் வணிகத்தையும் எதிர்வரும் தலைமுறைகள் சந்திக்கும்.
5. நீர்நிலை வற்றி போவதால் நீர்நிலை உயிரினங்கள் அற்று போகும். இயற்கை சமநிலை பாதித்து சுகாதார சீர்கேடுகள் உண்டாகும். (எ-கா) தலைபிரட்டை என்னும் தவளை இனம் அழிந்ததால்தான் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பெருகியதற்கு பெரும் காரணம் என்பது வல்லுனர்கள் கருத்து.
6. காடுகள் அழிந்தால் அதை வாழிடமாக கொண்ட ஒட்டு மொத்த பல்லுயிரியமும் அற்றுப் போகும். அதனால் நமக்கு பெரும் சுகாதார மற்றும் வாழ்வியல் பாதிப்புகள் உண்டாகும்.
7.வெட்டப்படுவது ஒரு மரமானாலும் அதனோடு தொடர்புடைய பல்லுயிரிய குடும்பமே சிதைகிறது.
8. காட்டில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் நகரவாசிகளுக்கு இடையூறாக இருக்கும். அகதிகள் போல அவைகள் வாழ இடமின்றி அற்றுப் போகும். காட்டில் இருந்து வெளியேறும் பூச்சிகள் வயல்வெளிகளுக்குள் புகுந்து விவசாயிகளுக்கு மேலும் சவாலாக அமையும்.
9. அங்குள்ள மர நிழலில் / காட்டு சூழலில் மட்டுமே வளரக்கூடிய தாவரங்கள் நிரந்தரமாக அழிந்து போவதால் மூலிகை புதையலான காட்டை இழந்து பல நோய்களுக்கு இயற்கை மருந்து கிடைக்காமல் வரும் தலைமுறை தவிக்கும்.
10. காடு அழிக்கபடுவதால் பறவைகள் பூச்சிகள் அற்றுப் போகிறது. மகரந்த சேர்க்கை தடைபட்டு இயற்கையான காடு விரிவாக்கம் முற்று பெறுகிறது. உலகில் உள்ள 70 சதவீத காடுகளை உருவாக்கியது பறவைகளும் பூச்சிகளும்தானே.
11. மர உச்சியில் வாழும் பறவைகளின் எச்சத்தின் மூலம் நடைபெறும் விதைப் பரவலும் நின்று போகிறது. இதனால் தரை பகுதியில் வாழும் தாவரம் உண்ணும் விலங்குகளின் உணவு சுழற்சியில் தடை ஏற்படுகிறது.
12. இந்நிலை நீடித்தால் இனி வரும் காலங்களில் கடம்பவனம் என்பது போல பெயரளவில் மட்டும்தான் வெள்ளிமலை காடு என்பதும் இருக்கும்.

ஒளிப்படம் - திரு. அசோக் இராமச்சந்திரன் |
நாம் செய்ய வேண்டியது என்ன :
வெள்ளிமலை காட்டை பாதுகாக்க எல்லோரும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். அது தொடர்பான விழிப்புணர்வை பிறரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எல்லோரும் ஒரு அணியில் நின்று ஒருமித்த குரலில் வெள்ளிமலை காட்டை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவோம். தீர்வு ஏற்பாடாத பட்சத்தில் வலிமையான போராட்டத்தை அறவழியில் தொடர்ந்து நடத்தி, வெள்ளிமலைக் காட்டை பாதுக்காப்போம். வீடுதோறும் நம் மண்ணின் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க வேண்டும். குப்பையை கண்ட இடங்களில் வீசி எறியாமல் குப்பை தொட்டியில் போட வேண்டும். சுற்றுச்சூழல் மேம்பாட்டில் அவசியம் பங்கெடுக்க வேண்டும். இயற்கை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக போராட வேண்டும்.செய்தி - 26.03.2014 Times of India |
நாம்
உயிர் வாழ சுவாசிக்கும் காற்றை தருகிற காட்டை காலி செய்துவிட்டு
வளர்ச்சியின் பெயரால் எது செய்தாலும் நாம் சுவாசிக்கும் காற்றுக்கு
ஈடாகுமா? பூமியவே பாதுகாக்கிற காட்டை அழித்துவிட்டு பாதுகாப்பு காவல் படை
அமைப்பது நமது கண்மூடித்தனத்தை காட்டுகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் 51(A) உள்ளதுபடி சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை மற்றும் கடமையாகும். வெள்ளிமலை காடு நம் சொத்து. அதை பாதுகாக்கிற அத்தனை முயற்சிகளிலும் தன்னார்வத்தோடு ஈடுபடுவோம். வெறும் மனிதர்களால் நிரப்பபடுகிற சிறையல்ல மதுரையின் நிலபரப்பு. வைகை நதி, மீனாட்சி அம்மன் கோவில், நாயக்கர் மகால், சமணர் படுகை, என நீளுகிற மதுரையின் பழம் பெருமைகளில் வெள்ளிமலை காடும் ஒன்று. மதுரையின் அடையாளமாக விளங்குகிற வெள்ளிமலை காட்டை பாதுகாப்போம். நம்மால் காடுகளை உருவாக்க முடியாது, பாதுகாக்கவே முடியும்...

Comments
Post a Comment