Posts

Showing posts from April, 2017

சூழலியல் சமூக நீதி - தொட்டியபட்டி

Image
சூழலியல் சமூக நீதி - தொட்டியபட்டி நிலமற்ற கூலி விவசாய தொழிலாளர்களின் பிரச்சனையோ, தண்ணீர் மறுக்கப்படும் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் மீதான வன்முறையோ, மீனவர் படுகொலையோ, காடுகளில் இருந்து மலைவாழ் மக்கள் விரட்டியடிப்பு உள்ளிட்ட சமூக அநீதி சிக்கல்கள் சூழலியல் பிரச்சனைகளோடு பிணைந்திருக்கின்றன. அணு உலை, நியூட்ரினோ உள்ளிட்ட அரசின் பேரழிப்பு திட்டங்களால் பாதிக்கப்பட போவது எளிய உழைக்கும் மக்கள்தான். அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூக மக்கள்தான் அரசின் பலிபீடங்களுக்கு காணிக்கையாக்கபடுகிறார்கள். பன்னாட்டு நிறுவன முதலாளிகளுக்கு எதிராக ஓரணியில் எளிய மக்கள் அனைவரும் பாட்டாளி வர்க்கமாக ஒன்று திரண்டு விடக்கூடாதென்று, சாதிய மோதல்களை, முரண்களை தக்கவைக்கிற அல்லது வளர்த்தெடுப்பது அரசின் நோக்கமாக இருக்கிறது. சூழலியல் அரசியல் பிரச்சாரம் அல்லது கருத்துருவாக்கம் இதனை உள்ளடக்கியதாக இருக்கிறது. இயற்கை வளங்களை தங்கள் உழைப்பின் மூலம் உற்பத்தி பொருள்களாக மாற்றுகிற பாட்டாளி வர்க்கத்தின் நிகழ் சிக்கல்களை, பல சூழலியல் செயற்பாட்டாளர்கள் பேசு பொருளாக முன்வைப்பதே இல்லை. மக்களை நீக்கிவிட்டு இயற்கை வளங்களையும், பல...