Posts

Showing posts from September, 2014

மகனுக்கு கடிதம் - மரப்பாச்சி பொம்மை

Image
அன்புள்ள கவின் பாரதிக்கு, உன் அப்பா எழுதுகிறேன். இன்னும் பிறக்காத அல்லது தத்தெடுக்கபடாத குழந்தைகளின் உடல்நலம் மீது அக்கறை கொண்டுள்ள ஒரு தந்தையின் மொழியில் இந்த கடிதம் மரபாச்சி பொம்மைகள் குறித்து உன்னோடு பேசிக் கொண்டிருக்கும். பல்லாயிரமாண்டு மரபின் நீட்சியை தொலைத்த சமூகத்தின் கதையிது. பக்குவத்தோடு இக்கடிதத்தை படிக்கும் பருவம் உனக்கு வரும் பொழுது இதன் அழுத்தம் அறிவாய். புற்று நோய் தொடங்கி நேற்றுவரை நம் தமிழ்ச்சமூகம் கண்டிராத புது புது நோய்களை பரப்பிக் கொண்டிருக்கும் நெகிழி (பிளாஸ்டிக்) பொம்மைகளை உன் இதழ்கள் சுவைத்து விடலாம். அதன் கொடிய நெடியை நீ முகர்ந்துவிடலாம், எல்லாவற்றுக்கும் மேல் நம்மை தாங்கும் தாய் மண்ணிற்கு இது தகாத விளைவை தருமட கண்ணே! அந்த அச்சம் கூட இந்த கடிதத்தை எழுத காரணமாக இருக்கலாம். குழந்தைகளுக்கு உடம்புக்கு முடியமல் போனால் மரபாச்சி பொம்மையை தண்ணியிலிட்டு உரசி நெற்றியில் தேய்க்கும் வழக்கும் நம் மரபில் உண்டு. அப்பேற்பட்ட மருத்துவ குணம் மற்றும் மனிதம் மீது நேசம் நிறைந்தவை நமது மரபு வழி உற்பத்தி பொருட்கள். மரபாச்சி பொம்மைகளை நீ சுவைக்கலாம், கடிக்கலாம், முகரலாம், க...

நாணல் நண்பர்கள் குழுவின் கணக்கு விபரங்கள்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாணல் நண்பர்கள் குழு கடந்த இரண்டு வருடங்களாக செயல்பட்டு வருகிறது. களத்தில் செயல்படும் சுமார் 30 இளைஞர்களை கொண்டு மதுரையில் பாரம்பரியம், வாழ்வியல், சூழல், வேளாண்மை, வரலாறு, பல்லுயிரியம், தண்ணீர், குழந்தை கல்வி, மாற்று பாலினம் தொடர்பான விழிப்புணர்வு, பிரசுரம், கருத்தரங்கு, பொது நிகழ்வுகள், போராட்டங்கள் என செயல்பட்டு வருகிறோம். நாம் நடத்திய பல நிகழ்வுகள், போராட்டங்கள் பத்தில் இருந்து முப்பது ரூபாய்க்குள் முடிக்கப்பட்டு இருக்கிறது. எழுத்து, பேச்சு, வழி நடத்தும் பல தோழமை இயக்கங்கள், பெரியவர்கள், நண்பர்கள், முற்போக்கு சிந்தனை, எல்லாவற்றுக்கும் மேலான உழைப்பு இவைதான் நாம் இயங்குவதற்கு பொருளாதரத்தை விட பெரிதும் காரணமாக இருந்தது. அனுபவ குறைவால் அல்லது சரியான திட்டமிடல் இல்லாமல் பல நிகழ்வுகளை எதிர்நோக்கிய பாதைக்கு நகர்த்த முடியாமல் போயிருக்கிறது. பல நிகழ்வுகள், போராட்டங்கள் முற்போக்கான சமூக மாற்றத்திற்கு வித்திட்டிருக்கிறது என்று நம்புகிறோம். வாழ்க்கை முழுதும் வகுப்பறை நிரம்பி இருக்கிறது. வீழ்ச்சியிலும் எழுச்சியிலும் கற்று கொண்டே இருக்கிறோம். கடந்த இரண்டு வருடங்...