மரபும் மரமும்

தமிழக மன்னர்களில் பாண்டிய மன்னனே பழமையான மன்னன் என்பது எல்லோரும் அறிந்ததே. முதல் மற்றும் இடை சங்கங்கள் மட்டுமே 237 பாண்டிய மன்னர்களால் 8100 ஆண்டுகள் இயங்கின என்பது வரலாற்று செய்தி. அந்த வகையில் மன்னர்களின் சின்னங்கள் குறித்து நாம் அறிந்தது வெகு சிலவே.சங்ககால மன்னர்கள் தாவரங்களை தங்கள் வாழ்வியலோடு இணைத்து பார்த்தனர். அதற்கு சான்றுகள் சில இங்கே... வேப்பமரமும் அதன் பூக்களும் பாண்டிய மன்னர்களின் சின்னம். ஆர் என்கிற அத்திப்பூ சோழ மன்னர்களின் சின்னம். போந்தை என்கிற பனைமரம் சேர மன்னர்களின் சின்னம். அரசமரம் தொண்டை மண்டில மன்னர்களின் சின்னங்களாக திகழ்ந்தன. இம்மண்ணின் மரங்கள் ஒவ்வொன்றும் நம் மரபோடும்,வாழ்வியலோடும் பிணைந்தவை. ஆனால் இந்த நகர மயமாக்கல் இந்த பிணைப்பை துண்டித்து விட்டது. பாண்டிய மன்னனின் சின்னத்தின் ஒன்றான வேப்பமரத்தின் காப்புரிமையை, பெறும் போராட்டத்திற்கு பின் சில மாதங்களுக்கு முன்பு தான் மீட்டெடுக்கப்பட்டது (வந்தன சிவா, நம்மாழ்வார் ஐயா ஆகியோர்களால்) தி ஹிந்து நாளிதழ், மதுரை 18 ஜூன் 2014 நமது பாரம்பரியத்திற்க்கு காப்புரிமை கொண்டாட அவ...