வெள்ளிமலைக் காடு - ஒரு அறிமுகம்

இந்திய பசுமை வேலி ஒரு பார்வை: மதுரையின் காடுகள் இயற்கை அமைப்பு பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் நம் இந்தியாவின் பசுமை பரப்பு பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம். படித்த மற்றும் களத்தில் திரட்டிய தகவல்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். நாணல் வெளியிட்டிருக்கும் இந்த கட்டுரை இந்திய வனம், காட்டுயிர் மற்றும் வெள்ளிமலை காடு குறித்த ஒரு தொடக்க நிலை அறிமுகத்தை உண்டாக்கும் என்று நம்புகிறோம். இந்திய மலைப் பகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கும் (66.7%), மொத்த பரப்பில் மூன்றில் ஒரு பங்கும் (33%) காடு இருக்க வேண்டும் என்பது நமது தேசிய வனக் கொள்கை (1988). 33 சதவீதம் இருக்க வேண்டிய காடுகள் இன்று இந்தியாவின் மொத்த நிலபரப்பில் 20 சதவீதம்தான் காடாக இருக்கிறது. எஞ்சியுள்ள அந்த 20 சதவீத காடுகளும் பெருமளவு துண்டாக்கப்பட்டு, வளமற்ற காடுகளாக உள்ளன என்பது நாம் கவலைப்பட வேண்டிய செய்தி. தமிழகத்தின் 1,30,058 சதுர கி.மீ மொத்த பரப்பில் 22,643 சதுர கி.மீ. மட்டுமே காடுகள் உள்ளன. அதாவது நிலபரப்பில் 15 சதவீதம். அதில் 3,305 சதுர கி.மீ. அதாவது வெறும் 2.5 சதவீதம் மட்டுமே பாதுகாக்கப்பட்ட காடுகளாக உள்ளது. சுற்றுச்சூழல...